ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தியில் பால்கி இயக்கியுள்ள 'ஷமிதாப்' படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்புடன் இணைந்து நடித்துள்ளார் தனுஷ். கதாநாயகியாக கமலின் இளைய மகள் அக்ஷரா அறிமுகமாகிறார். இளையராஜா இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது அதில் பெரும்பாலான காட்சிகளில் அமிதாப் குடித்துக்கொண்டே இருப்பதாக தெரிகிறது. ஆனால் உண்மையிலேயே மதுவுக்கு எதிரானவர் அமிதாப்.. இந்தப்படத்தில் மது அருந்தும் காட்சிகளில் நடித்தது ஏன் என்பது பற்றி, அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “இந்தப்படத்தில் எனது கேரக்டர் மன அழுத்தத்தாலும், ஈகோ பிரச்சனையாலும் குடிக்கு ஆளான ஒருவனை பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஒரு சில நடிகர்கள் காட்சிகளில் நடிக்கும் முன் குடித்துவிட்டு நடிப்பதாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆனால் என்னை பொறுத்தவரை நடிகர்கள் குடிப்பது நல்ல செயல் அல்ல” என்று சொல்லியிருக்கிறார் அமிதாப்.