Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

குஷ்பு கழுத்தில் பிளாஸ்டிக் தாலி! எழுந்தது புதிய சர்ச்சை!!

Kushboo in new controversy
பேஷன் என்ற பெயரில் ருத்திராட்ச மாலையில் பிளாஸ்டிக் தாலியை கோர்த்து நடிகை குஷ்பு அணிந்திருக்கிறார். நடிகை குஷ்புவின் கணவரும், டைரக்டர் கம் நடிகருமான சுந்தர் சி நடித்திருக்கும் புதிய படம் நகரம். குஷ்புவின் அவ்னி சி‌னிமேக்ஸ் நிறுவன தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் ‌நடந்தது. இந்த‌ விழாவில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு இசையை வெளியிட்டார். நிகழ்ச்சியில் துணைமுதல்வர் ஸ்டாலின், கனி‌மொழி எம்.பி., அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் சங்க தலைவர் இராம.நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தாலும்... அனைவரையும் கவர்ந்திழுத்தது நடிகை குஷ்புவும் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும்தான்.

ருத்திராட்ச மா‌லையில் பிளாஸ்டிக் தாலியை ‌கோர்த்து அணிந்திருந்தார் குஷ்பு. பேஷன் என்ற பெயரில் அவர் ருத்திராட்ச மாலையுடன், பிளாஸ்டிக் தாலியை கோர்த்து அணிந்திருந்தது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலரை முகம் சுழிக்க வைத்தது. இதற்கு முன்பு சினிமா விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த அம்மன் சிலை முன்பு நடிகை குஷ்பு செருப்பு அணிந்தபடி கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தை இந்து அமைப்புகள் கடுமையாக கண்டித்தன. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததால் மன்னிப்பு கேட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் குஷ்பு.

இப்போது பேஷன் என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பிளாஸ்டிக் தாலியும், ருத்ராட்ச மாலையும் புதிய சர்ச்சையை கிளம்பியிருக்கிறது. தமிழ் பெண்கள் கற்பு குறித்து பேட்டியளித்து வில்லங்கத்தில் சிக்கிய குஷ்பு சுப்ரீம்கோர்ட் வரை சென்றதும் நினைவிருக்கலாம்.

Tags »
Kushboo, controversy, nuptial knot, குஷ்பு, புதிய சர்ச்சை, பிளாஸ்டிக் தாலி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (126)

thahir - Qatar,கத்தார்
2011-02-14 15:04:12 Report Abuse
 thahir ரொம்போ அவசியம், வேலைய பாருங்கய்யா, அவங்க தாலி போட்டா என்ன போடலேன்னா நமக்கென்ன. நம்ம பொழப்ப நாம பார்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வினோத் குமார் - trichy,இந்தியா
2011-01-02 17:57:02 Report Abuse
 வினோத் குமார் பாடு ....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sethu - cuddalore,இந்தியா
2010-10-08 13:58:58 Report Abuse
 sethu போடா போடா வேலைய பாருடா.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
தலை - chennai,இந்தியா
2010-09-21 02:11:04 Report Abuse
 தலை அவளை பத்தி பேசி நேரத்த வீணாக்க வேணாம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
திராவிடன் - kaayal pattanam,இந்தியா
2010-09-19 06:24:09 Report Abuse
 திராவிடன் தங்கத்தலைவி குஷ்பூ அவர்கள் காய்த்த மரம்......காய்த்த மரம் தான் கல்லடி படும்......தலைவி குஷ்பூ அவர்கள், தலைவருக்கு பிறகு முதல்வர் ஆவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது......தங்கத்தலைவியின் ஆட்சி காலம் தமிழகத்தின் பொற்காலமாக இருக்கும்........வாழ்க தங்க தலைவி.....வளர்க தாய் தமிழகம்.......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 121 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in