ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் விஜயசேதுபதியுடன் நடித்த நநதிதா, இப்போது இடம் பொருள் ஏவல் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். முந்தைய படத்தைப்போலவே இந்த படத்திலும் நந்திதாவுக்கு நல்ல ரோல்தானாம். அதனால் இந்த படம் ஹிட்டடித்தால் விஜயசேதுபதியின் ராசியான ஹீரோயின் பட்டியலில் இடம்பிடித்து விடுவேன் என்கிறார் நந்திதா.
மேலும், தனக்கு சிட்டி சப்ஜெக்ட்டுகளை விட வில்லேஜ் சப்ஜெக்ட்டுகளே தொடர்ந்து ஒர்க்அவுட்டாகி வருவதால், கிராமத்து கதைகளுக்கே தற்போது முக்கியத்துவமும் கொடுத்து வருகிறேன் என்று கூறும் நந்திதா, இதேபோல் தனது தாய்மொழியான கன்னடத்திலும் வில்லேஜ் கதைகளாக தேடுகிறாராம்.
அதனால், ஏற்கனவே நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட படத்தில் நடித்துள்ள அவர், சென்னையிலேயே முகாமிட்டு தமிழ்ப்படங்களில் நடித்தபோதும், அடிக்கடி கன்னட பட விசயமாக பெங்களூர் சென்று வருகிறார். ஆனால், தமிழப்பட இயக்குனர்களுக்கு இவர் கன்னட படங்களில் நடிக்க முயற்சி எடுக்கிறார் என்று தெரிந்தால் ஓரங்கட்ட நினைப்பார்கள் என்பதால், எப்போது பெங்களூர் சென்றாலும், என் தோழிகளுடன் அரட்டை அடிக்காமல் ரொம்ப போரடிக்கிறது. அதனால்தான் பெங்களூர் விசிட் அடிக்கிறேன் என்று கூறிவிட்டு செல்கிறார் நந்திதா.