ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஆபாச படங்களாக இயக்கி வந்த டைரக்டர் சாமி, அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து தற்போது இயக்கியிருக்கும் படம் கங்காரு. இந்த படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தங்கை வேடத்தில் நடித்திருப்பவர் பிரியங்கா. பாண்டிச்சேரியை சேர்ந்தவரான இவர், இந்த படம் தமிழ் சினிமாவில் தனக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று எதிர்பார்க்கிறார்.
காரணம். அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான படங்கள் சினிமா வரலாற்றில் அழியாத இடத்தை பிடித்துள்ளன. உதாரணத்திற்கு சிவாஜி-சாவித்திரி நடித்த பாசமலர்கள், ரஜினி- ஷோபா நடித்த முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த விஜயகுமார்- ராதிகா என பல படங்களை உதாரணத்துக்கு சொல்லும் பிரியங்கா, இந்த படங்களில் நடித்த கதாநாயகிகள் அனைவரையும் எனது மனதில் கொண்டுதான் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அதனால அவர்கள் நடிப்பு எப்படி பேசப்பட்டதோ அதேபோல் எனது நடிப்பும் பேசப்படும் என்கிறார்.
மேலும், இனிமேல் நடிக்கும் படங்களிலும் வெறும் டம்மியான வேடமாக இல்லாமல் வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் பிரியங்கா, சில புதிய பட வாய்ப்புகள் தேடி வந்தபோது, ஏற்றுக்கொள்ளவில்லையாம். காரணம், கங்காரு படத்தில் என் நடிப்பை பார்த்தால்தான் எனது வேல்யூ என்னவென்று உங்களுக்குத் தெரியும். அப்போதுதான் என திறமைக்கேற்ற கதாபாத்திரத்தை நீங்களும் உருவாக்க முடியும் என்கிறாராம். அதனால் பிரியங்காவின் நடிப்பை என்னவென்று தெரிந்து கொள்வதறகாக கங்காரு படத்தை சில டைரக்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.