மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு, இன்டர்நேஷனல் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானுடன், மித் படத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் மல்லிகா ஷெராவத். அதனையடுத்து, மல்லிகா, ஹிஸ் மற்றும பாலிடிக்ஸ் ஆப் லவ் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தார். இந்நிலையி்ல், மல்லிகா ஷெராவத்திற்கு, இன்டர்நேஷனல் யூத் ஐகான் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது, மல்லிகாவிற்கு இரட்டை சந்தோஷத்தை வழங்கியுள்ளது. ஏனெனில், விருது பெற்றது மகிழ்ச்சி என்றால், இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் கலந்துகொண்டது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மல்லிகா ஷெராவத், தற்போது, டைரக்டர் போகாடியா இயக்கத்தில், டர்ட்டி பாலிடிக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.