Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சமந்தா, சித்தார்த் தொடரும் நட்பு...!

09 ஜன, 2015 - 10:03 IST
எழுத்தின் அளவு:

சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. அதைத் தொடர்ந்து சமந்தாவும் அது எங்களது தனிப்பட்ட விஷயம், அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள் என்றெல்லாம் 'டிவீட்' செய்தார். தெலுங்கு மீடியாக்களில் பரவ ஆரம்பித்த அந்தச் செய்தி அப்படியே தமிழ் மீடியாக்களுக்கும் பரவியது. இரு வருடங்களாகவே இருவரும் காதலித்து வந்தார்கள், பல விழாக்களில் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து ஆனவர் என்றாலும் சமந்தா அவரைத் தீவிரமாகக் காதலித்து வந்தார் என்றே சொல்லப்பட்டது.


இதனிடையே சமந்தா நடந்து கொள்ளும் விதம் சித்தார்த்துக்கு பிடிக்கவில்லையென்றும், படங்களிலும் விழாக்களிலும் அவர் ஆடை அணிந்து வரும் விதம் அவருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது என்றும் தெலுங்கு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டன. பத்து நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்ற நாகேஸ்வரராவ் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட சமந்தா, முதுகு முழுமையாகத் தெரியும் அளவிற்கு ஒரு மேலாடை அணிந்து வந்தது பரபரப்பான செய்தியாகப் பரவியது. அந்த விவகாரம்தான் அவர்களிருவருக்கும் மோதலை அதிகமாக்கியது என்கிறார்கள்.


சமந்தா, சித்தார்த் இருவரும் பிரிந்தனர் என்று செய்தி வெளியான பின்னும் சித்தார்த் மிகச் சிறந்த மனிதர் என்று அவருக்கு சமந்தா சான்றிதழ் வழங்கினார். நேற்று சித்தார்த் நடித்த 'எனக்குள் ஒருவன்' படத்தின் டிரைலர் யு டியூபில் வெளியானது. அதை சமந்தாவும் அவருடைய டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, “காத்திருக்க முடியவில்லை...அற்புதம்” என டிரைலரைப் பற்றி கமெண்ட் ஒன்றைப் போட்டிருந்தார்.


ஆனால், சித்தார்த்தோ, “என்னுடைய இருண்ட நேரத்தில் கடவுள் ஒரு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்,” என பதிவிட்டு அந்த டிரைலரை ஷேர் செய்திருக்கிறார். அவர் திரையுலக வாழ்க்கையைப் பற்றி அப்படி சொல்லியிருக்கிறாரா...அல்லது அவருடைய காதல் வாழ்க்கையைப் பற்றி சொல்லியிருக்கிறாரா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in