ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பால்கி இயக்கத்தில், இளையராஜா இசையைமப்பில் அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் 'ஷமிதாப்' படத்தின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. தனுஷும், கமல்ஹாசன் மகளான அக்ஷராவும் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் தமிழ் ரசிகர்கள் பலரும் அந்த டிரைலரை கடந்த இரண்டு நாட்களாக பார்த்து ரசித்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் அது பற்றிய பல கமெண்ட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நிஜத்தில் ரஜினிகாந்தும், தனுஷும் மாமனார், மாப்பிள்ளையாக இருக்க இந்தக் கூட்டணி 'ஷமிதாப்' படத்தின் ரீமேக்கில் இணைந்து நடித்தால் எப்படி இருக்கும் என பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்ததும் டூயட் பாடுவதையெல்லாம் விட்டு விட்டு மிகவும்வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து இன்றளவும் சூப்பர் ஸ்டாராகவே இருந்து வருகிறார். அது போல ரஜினிகாந்தும், இனி வரும் காலங்களில் தற்போது அமிதாப் தனது வயதுக்கேற்றபடி எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறாரோ அப்படி ரஜினிகாந்தும் தேர்ந்தெடுத்து நடித்தால் இன்னும் பல ஆண்டுகளுக்கு ரஜினிகாந்தை தமிழ்த் திரையுலகில் அடித்துக் கொள்ள யாருமிருக்க மாட்டார்கள் என நடுநிலையான ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
எவ்வளவோ படங்களில் நடித்து விட்ட ரஜினிகாந்த், 'முள்ளும் மலரும், தப்புத் தாளங்கள், ஆறிலிருந்து அறுபதுவரை' போன்ற வித்தியாசமான படங்களின் மூலம் கிடைத்த பெயரை மறுபடியும் வித்தியாசமான படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவாரா என்பதே இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.