ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால், ஹன்சிகா, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, சந்தானம், பிரபு நடிக்கும் ஆம்பள படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார். ஹிப் ஆப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படம் வருகிற பொங்கல் அன்று வெளிவருகிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர். படத்திற்கு யு சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஜாலியான படமாக இயக்கி உள்ளதாக இயக்குனர் சுந்தர்.சிக்கும், விஷாலுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளனர். யு சான்றிதழ் கிடைத்திருப்பதால் வரிவிலக்கிற்கு தயாரிப்பாளர் விஷால் விண்ணப்பித்துள்ளார்.
படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆம்பள படத்துடன் விக்ரம் நடித்துள்ள ஐ, ஜி.வி.பிரகாஷ்குமார் அறிமுகமாகும் டார்லிங் படமும் வெளிவருகிறது. தியேட்டர் நெருக்கடி நிலவுகிறது. என்றாலும் ஆம்பள படத்தை 300 தியேட்டர்களில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.