மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
2013ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் பச்சன். சுதீப் ஹீரோ, பாவனா ஹீரோயின். ஜெகபதி பாபு, ஆசிஷ் வித்யார்த்தி, திலீப் ஜோஷி, நாசர் நடித்திருந்தார்கள். ஹரிகிருஷ்ணா இசை அமைத்திருந்தார். சேகர் சந்துரு ஒளிப்பதிவு செய்திருந்தார். கன்னடத்தின் முன்னணி இயக்குனரான ஷாஷங்க் இயக்கி இருந்தார்.
ஆக்ஷன், காமெடி, த்ரில்லர் கதை. 2013ம் ஆண்டில் கன்னடத்தில் வெளியான படங்களில் அதிக வசூலைக் கொடுத்த படம். பல விருதுகளையும் பெற்றது. கன்னடத்தில் இந்தப் படத்தை தயாரித்த ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிருபா எண்டர்பிரைசஸ் நிறுவனம் தமிழில் டப் செய்து வெளியிடுகிறது. தமிழில் முரட்டு கைதி என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற 15ந் தேதி ரிலீசாகிறது. தமிழில் அறிமுமான பாவனா நீண்ட இடைவெளிக்கு பிறகு டப்பிங் படத்தின் மூலமாக திரும்பி வருகிறார்.