ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான். அவருடன் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸூம் பிரசாரம் செய்கிறார். இலங்கையில் ஜனவரி 8ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்ஷேவும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து மைத்திரி பால சிறிசேனா என்ற பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார். இந்தமுறையும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்போடு தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார் ராஜபக்ஷே.
இந்நிலையில், ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் இலங்கை சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். சல்மான் கான் உடன் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸூம் பிரசாரம் செய்தார். இவர் சல்மான் கான் உடன் கிக் படத்தில் நடித்தார். மேலும் இவர் இலங்கையை சேர்ந்தவர்.