ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் பி.கே. இப்படத்தின் முதல்போஸ்டர் வெளியிடப்பட்டபோதே, பெரும் சர்ச்சை உருவானது. அந்தப்படத்தின் போஸ்டரில் அமீர்கான் கிட்டத்தட்ட நிர்வாணமாக காட்சியளித்தார். இந்நிலையில் அந்த சர்ச்சையெல்லாம் கடந்து டிச., 19ம் தேதி பி.கே. படம் ரிலீஸானது. இப்படத்திற்கு மாறுபட்ட விமர்சனங்கள் எழுந்தபோதும் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.
இந்நிலையில், பி.கே. படத்தில் இந்துக்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் நிறைய இருப்பதாக கூறி, வடமாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், பஜ்ரங் தள் என்ற அமைப்பு இப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆமதாபாத்தில், பிகே படம் திரையிடப்பட்ட தியேட்டர்களை அடித்து நொறுக்கியது. இதேப்போல் மத்திய பிரதேசம் மாநிலம், போபாலிலும், பிகே படம் திரையிடப்பட்ட தியேட்டர்கள் சிலவற்றை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.