ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மில்லினியம் கோல்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் விளம்பர தூதுவராக அமலாபால் இருந்தார். இதற்கிடையில் அந்த நிறுவனத்திடம் 30 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு விளம்பர தூதராக இருந்த அமலாபால் ஒப்பந்தத்தை மீறி மற்ற நகை விளம்பரங்களில் நடித்தால் அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மில்லினியம் நிறுவனம் எடுத்திருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அமலாபால் எங்களது விளம்பர தூதராக இருப்பதில் பெருமை கொள்கிறோம். அவரைபற்றியும் எங்கள் நிறுவனம் பற்றியும் வரும் தகவல்கள் தவறானவை. ஒப்பந்தம் முடிந்து விட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. அமலாபால் தொழில் நேர்மை உள்ளவர். அவரது இமேஜூம், செல்வாக்கும் எங்கள் நிறுவனத்தின் மதிப்பு மிக்கவை. அவருடனான ஒப்பந்தத்தை அடுத்த வருடத்துக்கும் நீடித்துள்ளோம். என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.