ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கத்தி படம் வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூல் செய்ததாக அப்படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்னார். அவர் சொல்வது பொய் என்றும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்யவில்லை என்றும் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறினார்கள். விநியோகஸ்தர்கள் தரப்பிலும், கத்தி படம் 100 கோடி வசூல் செய்ததாக சொல்வது தவறான தகவல் என்று அப்போது சொல்லப்பட்டது. இந்நிலையில், 50 ஆவது நாளைக் கடந்திருக்கிறது கத்தி படம். 50 நாட்களில் கத்தி படம் வசூல் செய்ததே 146 கோடிதான் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது கத்தி படம் அமெரிக்காவில் 15.16 கோடியும், இங்கிலாந்தில் 3.23 கோடியும், மலேஷியாவில் 11.79 கோடியும், கனடாவில் 3.84 கோடியும் வசூல் செய்திருப்பதாகவும் புள்ளி விவரம் சொல்கிறார்கள். இந்த தொகை போக மீதமுள்ள தொகையை தமிழநாட்டில் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். இந்த புள்ளிவிவரத்தின்படி தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 112 கோடி ரூபாயை கத்தி படம் வசூல்செய்திருக்கிறதாம். இந்த தகவலை மறுக்கும் விநியோகஸ்தர்கள், 12 நாட்களில் 100 கோடி வசூல் செய்ததாக சொன்னவர்கள் இப்போது 50 நாட்களில் 146 கோடி என்று சொல்கிறார்கள். சினிமா வியாபாரம் பற்றி தெரியாதவர்கள் கிளப்பிவிடும் தகவல் இது. என்று கூறுகிறார்கள்.