Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நேகாவை பீல் பண்ண வைத்த விஜய்ஆண்டனி!

22 டிச, 2014 - 10:27 IST
எழுத்தின் அளவு:

நான், சலீம் படங்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் கன்னட நடிகை சுஷ்மா. இப்படத்தில் அவர் நடித்துள்ள வேடத்திற்கு முதலில் காதல் 2014 படத்தில் ஹாரீசுக்கு ஜோடியாக நடித்திருந்த நேகாதான் ஒப்பந்தமாகியிருந்தார்.


ஆனால், சலீம் படத்தில் விஜய் ஆண்டனி பிசியாக நடித்திருந்ததால், இந்த இந்தியா பாகிஸ்தான் படத்தின் படப்பிடிப்பு அப்போது ஒரு வாரம் மட்டுமே நடத்தப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதையடுத்து பல மாதங்கள் கிடப்பில் போடப்பட்டதால் அந்த படத்துக்காக மாதக்கணக்கில் காத்திருக்க விரும்பாத நேகா, வேறு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அப்போது திடீரென்று இந்தியா பாகிஸ்தான் படப்பிடிப்பை தொடங்கிய விஜய் ஆண்டனி, நேகாவை அழைத்தார். ஆனால் அவர் வேறு சில படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதாக சொல்லி தனக்காக காத்திருக்க சொன்னார். ஆனால், அவருக்காக காத்திருக்க விரும்பாத விஜய் ஆண்டனி, கன்னடத்தில் இருந்து உடனடியாக சுஷ்மாவை அழைத்து வந்து, நேகா நடித்த வேடத்தில் நடிக்க வைத்தார். இபபோது அந்த படமும் வெளியாக தயாராகி விட்டது.


ஆனால், அந்த சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் படத்தில் இருந்து வெளியேறியதை நினைத்து பெரிதாக பீல் பண்ணாத நேகா, இப்போது அதன்பிறகு அவர் கமிட்டான படங்கள் புதுமுக ஹீரோக்களின் படங்களாக இருப்பதோடு இன்னும் வெளியாகாமல் இழுத்துக்கொண்டே வருவதால், அவசரப்பட்டு ஒரு நல்ல படததை இழந்து விட்டேனே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in