ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
வெங்கட்பிரபு இயக்கத்தில், சூர்யா, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் மாஸ் படத்தின் டீசர், பொங்கலன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, டுவிட்டரில் தனது பாலோயர் கேட்ட மாஸ் படத்தின் அடுத்த அப்டேட் புத்தாண்டுக்கா? என்ற கேள்விக்கு, இயக்குனர் வெங்கட்பிரபு, அடுத்த அப்டேட் பொங்கலுக்கு என்று டுவிட்டரில் பதிலளித்துள்ளார். பொங்கலுக்கு, ஐ, என்னை அறிந்தால், ஆம்பள, கொம்பன் என பல்வேறு படங்கள் வெளியாக உள்ள நிலையில், மாஸ் படத்தின் டீசரும் அப்போது வெளியாக வாய்ப்புள்ளதாக, வெங்கட்பிரபு சூசகமாக தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம், ஏப்ரலில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.