Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பிகே படத்தின் உயிரே அந்த நிர்வாண போஸ்டர் தான் - அமீர்கான் பேட்டி!

18 டிச, 2014 - 13:21 IST
எழுத்தின் அளவு:

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், அமீர்கான், அனுஷ்கா சர்மா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வௌிவர இருக்கும் படம் பி.கே.,. இப்படம் டிசம்பர் 19ம் தேதி வௌியாக இருக்கிறது. பிகே படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் குறித்தும் அமீர்கான் என்ன சொல்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்...


படத்தின் உயிரே நிர்வாண போஸ்டர்


பிகே., படத்தின் முதல் போஸ்டரை வௌியிட வேண்டும் என தீர்மானித்தபோது நிர்வாண போஸ்டரை தான் வௌியிட முடிவு செய்தோம். இதற்கு முக்கிய காரணம், செக்ஸ் ரீதியாகவோ, அல்லது படத்திற்கு விளம்பரம் தேடவோ, இல்லை வேறு எந்த காரணத்திற்காகவோ அல்ல, பி.கே. படத்தின் உயிரே அந்த நிர்வாணம் போஸ்டர் தான். படத்தின் மொத்த கதையையும் இப்போஸ்டர் மறைமுகமாக சொல்கிறது. டிசைனிங் பாசையில் சொல்ல வேண்டுமென்றால், நிர்வாண போஸ்டர் தான் கலைக்கான உந்துகோல். எனது படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லோரது படத்திற்கும் கதை தான் கலைக்கான உந்துகோல்.


ரசிகர்களின் முதல் பாதிப்பு முக்கியமானது


நிர்வாண போஸ்டரை வௌியிட்டதே மக்களின் முதல் ரியாக்சன் எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ளத்தான் காரணம் பர்ஸ்ட் இம்பரசன் தான் பெஸ்ட் இம்பரசனாக இருக்கும். பிகே படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஷூட் செய்யும் போது சரியாக நான் மேக்கப் கூட போடவில்லை.


பிகே உலகளாவிய படம்


பிகே படம் பற்றி என்னால் விரிவாக சொல்ல முடியாது, ஆனால் ஒன்று மட்டும் இங்கே சொல்ல விரும்புகிறேன், பிகே உலகளாவிய, ஒரு செய்தியை சொல்கிற படம். இந்தப்படம் இவர்கள் மட்டும் தான் பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்படவில்லை, குழந்தைகள், வயதானவர்கள், இளைஞர்கள், கிராமத்தில் வசிப்பவர்கள், நகரத்தில் வசிப்பவர்கள் என அனைவரும் பார்க்கும் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.


ஹிட்டாகுமா...? ஆகாதா...? தெரியாது


நான் நடித்து கடைசியாக வௌிவந்த 2-3 படங்களும் பாலிவுட் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் படங்களாக அமைந்துள்ளன. அதனால் ரசிகர்கள் மத்தியில் பிகே படத்திற்கு நிறைய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. பிகே படம் ஹிட்டாகுமா, ஆகாதா என எனக்கு தெரியாது, ஆனால் ரசிகர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் பிடிக்கும். பிகே., படம் ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வரும், மக்கள் கூட்டத்தில் தியேட்டர்கள் நிரம்பும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.


மற்ற படங்களோடு ஒப்பிட மாட்டேன்


பொதுவாக நான் எனது படங்களை மற்றவர்களது படங்களோடு ஒப்பிடமாட்டேன். ஏனென்றால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதமான கதைக்களங்களை உடையவை. என்னுடைய படங்கள் எல்லாவற்றிலும் விசேஷமான கதையிருக்கும். உதாரணமாக எனது 3 இடியட்ஸ், கஜினி, தூம்-3 உள்ளிட்ட ஒவ்வொரு படமும் வெவ்வேறு கதைகளத்தை கொண்டவை.


உண்மையான வசூலை யாரும் தெரிவிப்பதில்லை


இன்றைக்கு படங்கள் அவ்வளவு கோடி வசூல் செய்தது, இவ்வளவு வசூல் செய்தது என்று செய்திகள் வௌியிடுகிறார்கள். அந்த செய்தியை கேட்கும்போது நிஜமாகவே எனக்கு ஷாக்காக இருக்கிறது. ஏனென்றால் 100க்கு 99 சதவீதம் பேர் யாரும் உண்மையான வசூலை தெரிவிப்பதில்லை, அவர்கள் தெரிவிக்கும் வசூல் நிலவரம் அனைத்தும் பொய்யானவை, அதில் என் படங்களும் அடக்கம். ஒரு சில தயாரிப்பாளர்கள் தான் உண்மையான வசூலை சொல்கிறார்கள். ரசிகர்களுக்கு நான் சொல்வது எல்லாம், படத்தின் வசூலை யாரும் பார்க்காதீர்கள், படத்தின் கதைக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.


இவ்வாறு அமீர்கான் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in