சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார் | பிரதீப் ரங்கநாதனின் டுயூட் தீபாவளிக்கு வருகிறது | 'எல் 2 எம்புரான்'ஐ ஓவர்டேக் செய்த 'தொடரும்' | மே 9 படங்களின் வரவேற்பு நிலவரம் என்ன? | தேசிய பாதுகாப்பிற்கு நிதி வழங்கும் இளையராஜா | சசிகுமாரின் ப்ரீடம் ஜூலை 10ம் தேதி ரிலீஸ் | விஜய் தேவரகொண்டாவின் 36வது பிறந்தநாள் : வைரலாகும் ராஷ்மிகாவின் வாழ்த்து | விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம் | ஜெயிலர் 2வில் போலீஸ் வேடத்தில் பாலகிருஷ்ணா | கல்வி தான் ஏணிப்படி... எங்க குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகப் போறான் : மகன் குறித்து முத்துகாளை உருக்கம் |
ஒருவர் இரண்டு வேடங்களில் நடித்தாலே பெரியதாக பேசப்பட்ட காலத்தில் நடிகர் திலகம் சிவாஜி 9 வேடங்களில் நடித்த படம் நவராத்திரி. பிற்காலத்தில் புராண படங்களுக்கு புகழ்பெற்ற ஏ.பி.நாகராஜன் இயக்கிய சமூகப் படம். தசாவதாரம் படத்தில் கமல் பத்து வேடங்களில் நடித்தாலும் இன்றைய தொழில்நுட்பம் அவருக்கு பெரிய அளவில் கைகொடுத்தது. ஆனால் எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் வெறும் ஒப்பனை மற்றும் தனது நடிப்பு திறமையாலேயே ஒன்பது வேடங்களில் நடித்திருந்தார் சிவாஜி.
கதை
நவராத்திரி விழா கோகாலாகமாக நடந்து கொண்டிருக்கும்போது சாவித்ரியின் தந்தை அவருக்கு ஒரு வரண் பார்த்து வருகிறார். "நான் உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். அவரைத்தான் நீ கல்யாணம் செய்ய வேண்டும்" என்கிறார். அதற்கு சாவித்ரி "நான் காதலிக்கும் ஆனந்தைத்தான் திருமணம் செய்வேன்" என்கிறார். தந்தை வற்புறுத்தவே வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
வீட்டை விட்டு ஓடி வரும் அவர் ஒன்பது நாளும் ஒன்பது விதமாக மனிதர்களை சந்திக்கிறார். பணக்காரன், குடிகாரன், மனோத்துவ நிபுணன், கொலைகாரன், விவசாயி, நாடக நடிகர், போலீஸ் அதிகாரி, முதியவர், காதலன் ஆனந்த் ஆகியோரை சந்திக்கிறார். அத்தனை பேரும் சிவாஜிதான்.
திருமணத்துக்கு மறுத்து தற்கொலைக்கு முயலும் சாவித்ரியை மனைவியை இழந்த அற்புதராஜ் (சிவாஜி) காப்பாற்றி அ ழைத்து வருகிறார். மறுநாள் அவர் சாவித்ரியை அவர் வீட்டில் விட முற்சிக்க. அங்கிருந்து தப்பும் சாவித்ரி ஒரு விபச்சார விடுதிக்கு வந்து சேர்கிறார். அங்கு நோயாளி மனைவியின் கணவர், குடிகாரர் (சிவாஜி) ஒருவரை சந்திக்கிறார். அவர் சாவித்ரியை திருமணம் செய்ய முயற்சிக்க அங்கிருந்து தப்பி போலீசிடம் மாட்டி ஒரு மனநோய் மருத்துவமனைக்கு வந்து சேர்கிறார்.
அங்குள்ள மனநோய் மருத்துவர் (சிவாஜி) சாவித்ரி பைத்தியமாக நடிப்பதை கண்டுபிடித்து விடுகிறார். அங்கிருந்து தப்பும் சாவித்திரி ஒரு கொலைகாரனிடம்(சிவாஜி) மாட்டிக் கொள்கிறார். அவர் தான் செய்த கொலைக்கான நியாயத்தை சொல்கிறார். அதற்குள் அவர் கொல்லப்பட அங்கிருந்து தப்பி ஒரு விவசாயி (சிவாஜி) வீட்டில் தஞ்சம் அடைகிறார். அங்கு போலிசாமியார் (நாகேஷ்) சாவித்திரிக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி அதை ஓட்ட திட்டமிட அங்கிருந்து தப்பி வாழ்ந்து கெட்ட ஒரு வயதானவரிடம் (சிவாஜி) வந்து சேர்கிறார். அவரை ஆஸ்பத்திரியில் சேர்க்கும்போது அங்குள்ள டாக்டர் அந்த வயதானவர் உதவியால் படித்தது தெரியவர அவரை ஒப்படைத்துவிட்டு ஒரு நாடக நடிகர் (சிவாஜி) வீட்டில் தஞ்ச மடைகிறார்.
ஹீரோயின் வராததால் நிற்கும் ஒரு நாடகத்தில் நடித்துக் கொடுக்கிறார். அந்த நாடக கம்பெனி முதலாளி சாவித்திரியிடம் தவறாக நடக்க முயற்சிக்க அங்கிருந்தும் தப்பி ஒரு போலீஸ் அதிகாரியிடம் (சிவாஜி) மாட்டிக் கொள்கிறார். அவர் சாவித்ரியின் காதலன் ஆனந்தின் (சிவாஜி) உறவினர். அவர் மூலம் தனக்கு பார்த்த மாப்பிள்ளையே ஆனந்த்தான் என்பதை அறிந்து கொள்கிறார். கடைசி நாள் திருமணம் நடக்கிறது. ஒன்பதாவது இரவு அவருக்கு முதலிரவாகிறது.
நவரசம்
கோபம், ஆனந்தம், கருணை, சாந்தம், அருவருப்பு, பயம், கருணை, வீரம், சிருங்காரம், ஆகிய குணங்களை கொண்ட மனிதர்களாக சிவாஜி நடித்திருந்தார். நவரசமான நடிப்பை அள்ளிக் கொடுத்திருப்பார். கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி சிவாஜியைத் தவிர மற்ற அனைவரும் வருவார்கள். ஒரே பிரேமில் 8 சிவாஜியை காட்டியது அன்று பரபரப்பாக பேசப்பட்ட விஷயம். ஒரு நடிகன் ஒரே படத்தில் 9 வேடத்தில் நடித்தது இந்தியாவில் அதுதான் முதல் முறை.
நவரத்தினம்
பெரும் பெற்றி பெற்ற இந்தப் படம் பின்னர் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. நடிகையர் திலகம் சாவித்திரியின் நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டது. சிவாஜி என்னும் நடிப்பு சக்ரவர்த்தியின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினமாக நவராத்திரி காலத்தை கடந்தும் மின்னிக் கொண்டிருக்கிறது.