ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சமீபகாலமாக தமிழ் நாட்டிலுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில், விஜய், அஜீத் முதலிடம் வகித்து வருகிறார்கள். அவர்களை அடுத்து சூர்யா, தனுஷ் படங்களும் இப்போது அங்கு ஓடி வருகின்றன. இந்த நிலையில், ரஜினி நடித்து கடந்த 12-ந்தேதி வெளியான லிங்கா படமும் கேரளாவில் வெளியிடப்பட்டது.
மொத்தம் 50 தியேட்டர்களில் வெளியிட்டார்களாம். ஆனால் மூன்றே நாட்களில் 9 தியேட்டர்களில் இருந்து லிங்காவை எடுத்து விட்டு வேறு படங்களை போட்டு விட்டார்களாம். காரணம், அந்த தியேட்டர்களில் லிங்காவை திரையிட்ட நாளில் இருந்தே மக்கள் கூட்டம் இல்லையாம். மேலும், தற்போது ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர்களிலும் ஓரிரு நாட்கள் மட்டுமே கலெக்சன் இருந்ததாம்.
அதையடுத்து, பெயரளவுக்குத்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறார்களாம். அந்த வகையில், லிங்காவை 11 கோடி கொடுத்து கேரளாவில் வெளியிடும் உரிமையை வாங்கிய விநியோகஸ்தருக்கு இதுவரை 5 கோடி வரைதான் கைக்கு கிடைத்துள்ளதாம். எப்படியாவது போட்ட காசையாவது எடுத்து விட வேண்டும் என்பதற்காக தற்போது பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டுள்ளார்களாம்.