ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படத்தில் வரும் சண்முக பாண்டியனின் ஓப்பனிங் சாங்கை பிரமாண்டமாக எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இந்தப் பாடலை சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் இணைந்து பாடியுள்ளனர். கார்த்திக்ராஜா இசை அமைத்துள்ளார்.
பாடலின் ஆடியோ வடிவம் தயாராகிவிட்டது. இந்தப் பாடலை ஒரு கோடி ரூபாய் செலவில் எடுக்க இருக்கிறார்கள். இதற்காக பிரமாண்ட அரங்கங்கள் அமைக்கப்படுகிறது. பாடலில் சண்முக பாண்டியனுடன் ஹீரோயின்கள் நேஹா சிங்கும், சுப்ரா அய்யப்பாவும் ஆட உள்ளனர். இரண்டு நடன இயக்குனர்கள் இந்த பாடலில் பணியாற்ற உள்ளனர். சண்முக பாண்டியனுக்கும், ஹீரோயின்களுக்கும் ஒரு வாரம் தீவிர நடன பயிற்சி அளித்து, அதன் பிறகு பாடலை எடுக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் எல்.கே.சுதீஷ் செய்து வருகிறார்.