ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பொதுவாக சினிமாவில் வரும் நண்பர்கள் ஹீரோ, ஹீரோயின் காதலுக்கு உதவுவார்கள். காதலுக்கு பிரச்னை வந்தால் உயிரையும் கொடுப்பார்கள். ஆனால் புதியவர்கள் இணைந்து உருவாக்கும் ''காதல் போல வேறேது'' என்ற படத்தின் கதை அப்படியே தலைகீழ்.
"நண்பன் ஒரு அழகான பெண்ணை காதலிப்பதை விரும்பாத நண்பர்கள் இருவரிடமும் நைசாக பேசி காதலை கெடுக்கிறார்கள். நண்பனை பற்றி அவன் காதலியிடம் தவறாக சொல்லி அவளை காதலே வேண்டாம் என்று சொல்ல வைக்கிறார்கள். நண்பனிடம் காதலி தவறான நடத்தை கொண்டவள் என்று கூறி அவனை குடிகாரனாக்குகிறார்கள். உண்மை தெரியவரும்போது என்ன நடக்கிறது என்பது கதை. நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்கிற கதை" என்கிறார் இயக்குனர் வி.கே.சிதம்பரம்.
எஸ்.ஆர்.அருண்ராஜ், கிருஷ்ணப்ரியா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். விமல் முருகன் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகோபிநாத் இசை அமைக்கிறார். எல்லோருமே சினிமாவுக்கு புதிதாக வந்திருப்பவர்கள்.