Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

என்னை நடிகனாக்கியது என் மனைவிதான்! - காமெடி நடிகர் பாலசரவணன் பேட்டி

13 டிச, 2014 - 13:17 IST
எழுத்தின் அளவு:

பாரதிராஜா, பாலா போன்ற பெரிய டைரக்டர்களிடம் உட்கார்ந்து மியூசிக் போட்ட ஜி.வி.பிரகாஷ்குமார் என்னிடம் சகஜமாக பழகியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நம்மதான் சிம்பிளா இருக்கிறதா நாம நெனச்சிக்கிட்டு இருக்கிற, அவங்க நம்மளையெல்லாம் விட சிம்பிளா இருக்காங்க. அதை அவரோட பழகினப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன் என்கிறார் காமெடி நடிகர் பால சரவணன். தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...




* நீங்கள் நடிகரான கதையை சொல்லுங்கள்?


மதுரை பக்கத்திலுள்ள பறவை என்பதுதான் எனது சொந்த ஊர். பறவை முனியம்மாவின ஊரை சேர்ந்தவர்தான் நான். ஊரில் இருக்கும் போது நண்பர்களிடம் காமெடியாக பேசிக்கொண்டிருப்பேன். அதோடு, நான் கிரிக்கெட் பிளேயரும்கூட. அப்போது எங்கள் வீட்டுபக்கத்தில் இருக்கும் ஒரு அண்ணன் விஜய் டி.வியில் ஒரு ஆடிசன் வைக்கிறாங்க. நீ எங்களையெல்லாம் வாயடிச்சு கலாய்ககிறேல்ல அங்கு போயி நடிச்சு உன் வாயாடித்தனத்தை காட்டு என்றார். அதற்கு நமக்கெல்லாம் நடிப்பு வராதுன்னே என்றேன். போயி அட்டன் பண்றா என்றார். அதையடுத்து நான் முயற்சியில் இறங்கிறப்ப பழைய சீரியல்களைபார்த்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆன்சர் பண்ண வேண்டும் என்றனர்.


காலேஜ் போறதையே கட்டடிச்சுட்டுதான் ஊரை சுத்திக்கிட்டிருக்கிறேன். இதுல சீரியல போய் எங்கிருந்து பார்க்கிறது என்று யோசித்தேன். அப்போது, இப்போது எனது மனைவியாக இருக்கும் ஹேமா எனது காதலியாக இருந்தார். அவரிடம் இந்த மாதிரி சீரியல் பாத்து கேள்விக்கு பதில் எழுதினாதான் விஜய் டி.வி சீரியல்ல நடிக்க சான்சு கிடைக்குமாம்ன்னு சொன்னேன். எனக்கு பதிலு அவங்க சீரியல் பாத்து பதிலு எழுதி போட்டாங்க. அதையடுத்து விஜய் டிவியில இருந்து இன்டர்வியூ கார்டு வந்துச்சு. ஆடிசன்ல செலக்ட் ஆகி உள்ளே வந்துட்டேன. விஜய் டிவி அப்ப தயாரிச்ச கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் சீரியல்ல நடிச்சேன். அது ஒரு 120 எபிசோடுல நிறுத்திட்டாங்க. அதுக்கு அப்புறம் கனா காணும் காலங்கள் தொடரில் நடிச்சேன்.


அதேமாதிரி எங்க அப்பா அம்மாவும் ரொம்ப சப்போட்டு. நான் இஞ்சினியரிங் படிச்சிக்கிட்டருக்கும்போது நடிக்க போறேன்னு சொன்னதுக்கு அவங்க ஒன்னும் சொல்லல. எங்க அப்பா அம்மா ரெண்டு பேருமே எங்கிட்ட ப்ரண்டாதான் பழகுவாங்க. அதனால் இஞ்சினியரிங் படிச்சிக்கிட்டிருக்கிறப்ப நடிக்க போறேன்னு சொன்னபப அவங்க என்னை தடுக்கல. தாராளமா போயிட்டு வா உனக்கு இன்ட்ரஸ்டுன்னா போயிட்டு வான்னு வாழ்த்தி அனுப்பினாங்க. அவங்க ஆசீர்வாதத்தோட வந்த எனக்கு அவங்களோட மனசு போலவே வெற்றி கிடைச்சது. அது ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அதோட, விஜய் டிவியில என்னை செலக்ட் பண்ணின ரமணி சார் இப்ப வரைககும் எனக்கு உறுதுணையாக இருக்கிறாரு. அதே மாதிரி கள்ளிக்காட்டு பள்ளிக்கூடம் ஜெரால்டு சார்தான் எனக்கு நடிப்ப கத்துக்கொடுத்தவரு. இயக்குனர் மகேந்திரன் சார் எழுதிய நடிப்பு என்பது என்ற புத்தகத்தை எனக்கு கொடுத்து உனக்கு பயன்படும் என்று சொன்னார். அப்படி அவர்களது ஒத்துழைப்போடு சீரியலில் நடித்து இன்றைக்கு அடுத்த கட்டமாக சினிமாவுக்கு வந்தாச்சு


* சினிமா வாய்ப்பு எப்படி வந்தது?


கனா காணும் காலங்கள் பாத்துட்டு ஈகோ என்ற படத்துல எனக்கு சான்ஸ் கெடைச்சிது. அதுக்கு அப்புறமா சசிகுமார் நடிச்ச குட்டிபுலி படத்துல நடிச்சேன். ஆனால் முதல்ல குட்டிபுலி தான் ரிலீஸ் ஆனது. இந்த படம்தான் என்னை பெரிய அளவில் ரீச் பண்ணியது. என்னை சினிமாவுல நிலைக்க வச்சுது. அந்த வகையில குட்டிப்புலி டைரக்டர் முத்தையா சாருக்கு நான் பெரிய நன்றி சொல்லனும்.


இதற்கு இடையில 6 குறும்படங்கள்ல அசோசியேட் டைரக்டரா ஒர்க் பண்ணினேன். அப்போது அருண்குமார் இயக்கிய பண்ணையாரும் பத்மினியும் என்கிற குறும் படத்துல நாயகனா நடிச்சேன். அந்த குறும்படம் பெரிய படமாக எடுக்கப்பட்டபோது நான் நடிச்ச ஹீரோ வேடத்துல விஜயசேதுபதி நடிச்சார். நான் பீடை என்கிற ரோலில் நடிச்சேன. எனக்காக அந்த ரோலை பெரிதாக மாற்றினார் இயக்குனர். அதுக்கப்பறம் திருடன் போலீஸ். சினிமாவில் இந்த அளவுக்கு நடிக்கனும் என்று நான் நினைத்த ஆசை முழுசாக நிறைவேற்றின படம் இது. ஒரு படத்துல ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கு முழுநீள காமெடி நடிகனாக இருக்கனும்னு. என் நடிப்ப பார்த்துட்டு மக்கள் சிரிச்சு ரசிக்கனும்னு நான் ஆசைப்பட்டத இந்த திருடன் போலீஸ் படம்தான் நிறைவேற்றியது. இந்த வாய்ப்பு கொடுத்த கார்த்திக் ராஜூ சாருக்கும் நான் பெரிய நன்றிக்கடன்பட்டிருக்கேன்.


அப்புறம் நெருங்கி வா முத்தமிடாதே படத்துல லட்சுமி ராமகிருஷ்ணன் வாய்ப்பு கொடுத்தாங்க. எல்லாரையுமே ஒரே மாதிரி ட்ரீட் பண்ற அவங்க, என்னை அவங்க மகனை மாதிரி நெனைச்சாங்க. ரொம்ப நல்லவங்க அந்த மேடம். அதுக்கப்புறம் ஆ படம். இந்த படம் மூலமாதான் நான் பாரினையே பாத்தேன். ஜப்பான், துபாய் எல்லாம் போயிட்டு வந்தேன்.


* சினிமாவில் உங்களுக்கு இன்ப அதிர்ச்சியாக நடந்த விசயம் ஏதாவது உள்ளதா?


இருக்கு. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா சார் ஒருநாள் என்னை கூப்பிட்டு ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவா நடிக்கிற டார்லிங் படத்துல என்னை கமிட் பண்ணினார். ஈகோ படம் பாத்துட்டு என்னை முதல்முதலாக பாராட்டுன விஐபி அவர்தான். கிட்டத்தட்ட இரண்டரை வருசத்துக்கு பிறகு என்னை கூப்பிட்டு இந்த படத்தில் சான்ஸ் கொடுத்தார். படம் முழுக்க ஜி.வி.பிரகாசுடன் வரும் கேரக்டர். ரொம்ப பெரிய கேரக்டர். என்னை நம்பி அத்தனை பெரிய கேரக்டரை கொடுத்திருக்கிறார் ஞானவேல்ராஜா சார்.


* ஜி.வி.பிரகாசுடன் நடித்த அனுபவம் எப்படி?


ஆடுகளம், பரதேசி, அன்னக்கொடி, தலைவா போன்ற மெகா படங்களுக்கு இசையமைத்த ஜி.வி.பிரகாசுடன் நடிக்கப்போகிறோம் என்றதும் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. அதோடு அவர் ரொம்ப பெரிய ஆளாயிற்றே அவருடன் எப்படி நடிக்கப்போகிறோம் என்று மனதளவில் ஒரு பயமும் இருந்தது. ஆனால், அவரோ, நம்மகூட சின்ன வயதிலேயிருந்தே பழகிட்டு வர்ற காலேஜ் பரண்ட் மாதிரி பழகினாரு. இப்பவும் எப்ப தொடர்பு கொண்டாலும் இனிமையா பேசுவாரு. உனக்கு என்ன குறை எதுனாலும் எங்கிட்ட சொல்லு நான் செய்றேன் என்பார். நிறைய டைரக்டர்கள்கிட்டயும் என் நடிப்ப பற்றி சொல்றாரு. பாரதிராஜா, பாலா போன்ற பெரிய டைரக்டர்களிடம் உட்கார்ந்து மியூசிக் போட்டவர் என்னிடம் சகஜமாக பழகியது மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. நம்மதான் சிம்பிளா இருக்கிறதா நாம நெனச்சிக்கிட்டு இருக்கிறமில்ல அவங்க நம்மளையெல்லாம் விட சிம்பிளா இருக்காங்க. அதை அவரோட பழகினப்பதான் தெரிஞ்சிக்கிட்டேன்.


* டைரக்டர்கள் உங்களிடம் படத்தின் முழுக்கதையையும் சொல்வார்களா?


சிலர் சொல்வார்கள். சிலர் சொல்லமாட்டார்கள். அதோடு காமெடியனிடம் முழுக்கதையையும் சொல்ல வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. எனது கேரக்டரை பற்றி முதலிலேயே சொல்லி விடுவார்கள். அடுத்து ஸ்பாட்டில் நடிக்கும்போதும் அந்த கேரக்டர் பற்றியும் காட்சியை பற்றியும் விளக்குவார்கள. எனக்கு அது தெரிஞ்சாலே போதும். ஏன்னா நம்மளோட போர்சன் சின்னதாதானே வரும். மெயினா ஹீரோ ஹீரோயினுக்குத்தான் முழுக்கதையும் தெரியனும்.


* அசோசியேட் டைரக்டராக ஒர்க் பண்ணியிருக்கிறீர்களே? டைரக்சன் பண்ணும் ஆசை உள்ளதா?


இப்பத்தான் சினிமாவில் குழந்தை மாதிரி தவழத் தொடங்கியிருக்கிறேன். நான் இன்னும் போக வேண்டிய தூரம் ரொம்பவே உள்ளது. நல்லதொரு நகைச்சுவை நடிகனாக பெயர் வாங்கிய பிறகுதான் டைரக்சன் பண்ணுவதைப்பற்றி யோசிப்பேன். மேலும், சினிமாவில் இப்பத்தான் பாலா என்கிற ஒருநடிகர் இருப்பதே தெரியத்தொடங்கியிருக்கிறது. அதனால் அடுத்தடுத்து இன்னும் பெரிய ஹீரோக்கள், பெரிய டைரக்டர்களின் படங்களில் நிறைய நடிக்க ஆசைப்படுகிறேன. இன்னும் நிறைய நல்ல பெயரெடுக்கனும்.


மேலும் நான் இயக்கும் முதல் படம் பேண்டஸியாக இருக்கும். அதோடு, நான் இயக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன். அவசியப்பட்டால் ஒரு சிறிய ரோலில் நடிப்பேன். இருந்தாலும் இப்போது எனது கவனம் முழுக்க நடிப்பில் இருப்பதால் டைரக்சனைப்பற்றி பின்னர்தான் யோசிப்பேன்.


* காமெடியன் ஹீரோவாகிக்கொண்டிருக்கிறார்களே? ஹீரோ ஆசை மனதளவில் உள்ளதா?


ஹீரோ ஆகும் ஆசை இல்லவே இல்லை. நல்ல நகைச்சுவை நடிகனா பெயரெடுக்கனும். அதுக்கப்பறம் டைரக்ட் பண்ணனும். ஒரு பக்கம் காமெடி நடிகரா நடிச்சிக்கிட்டு, இன்னொரு பக்கம் டைரகட் பண்ணனும்ஙகிறதுதான் எனது எதிர்கால ஆசையே, இப்போதைக்கு நடிப்பை தக்க வைத்து கெள்வதில் தான் எனது மொத்த கவனமும் உள்ளது. என்னை காமெடியனாக நான் தக்க வைத்து கொள்ளவே இன்னும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று நினைக்கிறேன். மேலும், இப்போது சீனுராமசாமி இயக்கத்தில் இடம்பொருள் ஏவல், எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் வலியவன். காதல் சொல்ல வந்தேன் பாலாஜி நடிக்கும் நகர்வலம் என பல படங்களில் நடிக்கிறேன். இதுதவிரவும் சில படங்களில் பேசிக்கொண்டிருக்கிறேன்


* உங்கள் பேமிலியைச் சேர்ந்தவர்கள் உங்களது நடிப்பை விமர்சனம் செய்வார்களா?


எனது அம்மா அப்பா எப்போதுமே நான் என்ன செய்தாலும் அதை ரசிப்பார்கள். அதேபோல் எனது மனைவி ஹேமாவும் என் நடிப்பில் குறை சொன்னதில்லை. ரொம்ப நன்றாக நடிக்கிறீர்கள் என்று என்னை உற்சாகப்படுத்துவார். ஆனால் எனது நண்பர்கள் வட்டாரம்தான் நிறை குறைகளை விமர்சிப்பார்கள். அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை ஏற்று அடுத்த படத்தில் அது இல்லாத அளவுக்கு நடித்துக்காட்ட முயற்சித்து வருகிறேன். அந்தவகையில், எனது குடும்பத்தாரை போன்று எனது நலனில் அக்கறை கொண்ட நிறைய நண்பர்கள் எனக்கு இருப்பது எனது பலம் என்று நினைக்கிறேன் என்கிறார் பால சரவணன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in