ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பார்த்திபனுடன் நடித்த வித்தகன் படம் பூர்ணாவை ஏமாற்றியதால், தகராறு படத்தில் வில்லி வேடத்தில் நடித்தார். ஆனால் அப்போதும் அவரது மார்க்கெட் சூடுபிடிக்கவில்லை. ஆனால், தெலுங்கில் அவர் நடித்த அவுனு என்ற படம் அவரை பரபரப்பான நடிகையாக பேச வைத்திருக்கிறதாம். இந்த படத்தில் குளியல் காட்சிகளிலும் கலக்கியிருக்கும் பூர்ணாவை அந்த படத்தின் கேமராமேன் ரொம்ப அழகாக காண்பித்திருப்பதால், இதுவரை இளவட்ட ரசிகர்களின் கவனத்துக்கு செல்லாமல் இருந்த பூர்ணா இப்போது அவர்களின் இதயங்களில் குடியேறி விட்டாராம்.
அதனால், இத்தனை ஆண்டுகளாக சினிமா வாழ்க்கையில், ஒரு உறுதியான மார்க்கெட்டை பிடிக்க முடியாமல் அல்லாடிக்கொண்டிருந்த பூர்ணா இப்போது தெலுங்கில் அழுத்தமாக காலூன்றி விட்டார். தனக்கு வாழ்க்கை கொடுத்தது கிளாமர்தான் என்பதால், தனது உடம்பை பேணிக்காப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் பூர்ணா, தன்னை அழகியலோடு காண்பிக்கும் கேமராமேன்களின் படமென்றால் உடனே கமிட்டாகி விடுகிறாராம்.
மேலும், இதுவரை அவரை கண்டுகொள்ளாமல இருந்த சில கோலிவுட் படஅதிபர்கள் இப்போது பூர்ணாவை வைத்து படம் பண்ணினால், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நல்ல வியாபாரம் செய்து விடலாம் என்று அவரை அணுகி வருகின்றனர். ஆனால், அப்படி தன்னிடம் கால்சீட் கேட்டவர்களிடம், மொத்த கதையையும் கேட்ட பூர்ணா, அப்படங்களின் ஹீரோக்கள் புதுமுகம் என்றதும், நான் இப்போது முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதில்தான் ஆர்வமாக உள்ளேன். மார்க்கெட்டில் இல்லாத ஹீரோக்களுடன் நடித்து என் மார்க்கெட்டை இறக்கிக்கொள்ள நான் தயாராக இல்லை எனறு அவர்களை திருப்பி அனுப்பி விட்டாராம்.