ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
ஸ்ஸ்ஸ்ஸப்பா...என்றுதான் யோசிக்கத் தோன்றுகிறது சமூக வலைத்தளங்கள் பக்கம் போனால். நம்மை யாராவது அடித்தார்கள் கூட சும்மா இருப்பார்கள், ஆனால், அவர்கள் தலைவரை யாராவது கிண்டலடித்தால் சும்மா இருக்க மாட்டார்கள் போலிருக்கிறது. நேற்று, 'லிங்கா' படம் வெளிவந்தாலும் வந்தது, ஃபேஸ்புக், டிவிட்டர் பக்கம் போக முடியவில்லை. சில தீவிர விஜய், அஜித் ரசிகர்கள் லிங்கா படத்தைப் பற்றி கிண்டலடிக்க, அதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலுக்கு தாறுமாறாக பதிலளிக்க வார்த்தைகளால் காது கூசும் அளவிற்கு சண்டையிட்டுக் கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஒரு சிலரோ ஒரு படி மேலே போய், “அஞ்சான், லிங்குசாமி தப்பிச்சிட்டாரு...லிங்கா ரவிக்குமார் சிக்கிக்கிட்டாரு...நம்மகிட்ட...” என்றெல்லாம் போட ஆரம்பித்து விட்டார்கள். அனுஷ்காவிற்கு படத்தில் பாவாடை, தாவணியில் அறிமுகக் காட்சி வைத்துள்ளதையும், கிளைமாக்சில் இதுவரை எந்த ஒரு தமிழ்ப் படத்தில் வந்திருக்காத அளவிற்கு ஒரு பிரம்ம்ம்.....மாதமான காட்சியை வைத்திருப்பதையும் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
சில தொலைக்காட்சிகளில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஒளிபரப்பான 'லிங்கா' பற்றிய நிகழ்ச்சிகளில் ரஜினியின் ரசிகர்கள் 'கத்தி' படத்தின் வசூல் பற்றியும், சூப்பர் ஸ்டார் பற்றியும், கமெண்ட் அடித்துப் பேசியிருக்க, அதற்கு விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிலளித்து வருகிறார்கள். ஏற்கெனவே, விஜய், அஜித் ரசிகர்கள் இடையே இருந்த சண்டையில் தற்போது புதிதாக ரஜினிகாந் ரசிகர்களும் சேர்ந்திருப்பது, இது எங்கே போய் முடியப் போகிறதோ...என்று பதற வைக்கிறது...
ஏம்பா...மார்க்கு....எங்க ரசிகர்கள் ஃபேஸ்புக்கை எப்படியெல்லாம் பயன்படுத்தறாங்கன்னு உனக்கு தெரியுமாப்பா....!