ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் சகாப்தம் படத்தின் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. ஒரு மாதம் வரை மகனுக்காக தமிழ் நாட்டு மக்களை மறந்து, கட்சியை மறந்து, தொண்டனை மறந்து மலேசியாவில் தங்கியிருந்து படத்தின் பெரும்பகுதி காட்சிகளை எடுத்து திரும்பியிருக்கிறார் விஜயகாந்த்.
படத்தில் இரண்டு நாயகிகள் ஒருவர் நேகா, இன்னொருவர் சுப்ரா அய்யப்பா. இவர்கள் தவிர சிங்கம்புலி, ஜெகன், தேவயானி, ரஞ்சித், சண்முகராஜன், சுரேஷ் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சுரேந்திரன் இயக்குகிறார். கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். பூபதி ஒளிப்பதிவு செய்கிறார்.
இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்க இருக்கிறது. இதுவரை படத்தின் ஸ்டில்களை வெளியிடாமல் இருந்தார்கள். தற்போது பர்ஸ்ட் லுக் ஸ்டில்களை வெளியிட்டிருக்கிறார்கள்.