ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் லிங்கா, என்னை அறிந்தால் படங்களில் நடித்துள்ள அனுஷ்கா, தெலுங்கில் ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி போன்ற சரித்திர படங்களிலும் நடித்து வருகிறார். இதில் ருத்ரம்மா தேவி படப்பிடிப்பு முடிநது விட்ட நிலையில, தற்போது பாகுபாலி படப்பிடிப்பு மட்டுமே நடக்கிறது. இதையடுத்து எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லையாம்.
சில தெலுங்கு பட நிறுவனங்கள் கால்சீட் கேட்டபோது, நடித்துள்ள படங்கள் வெளியான பிறகுதான் அடுத்த படம் பற்றி யோசிப்பேன் என்று சொல்லி தட்டிக்கழித்து விட்டாராம். அதனால், 33 வயதாகி விட்ட அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள தயாராகி விட்டார் என்று ஏற்கனவே பரவிய செய்தி தற்போது மீண்டும் சினிமா வட்டாரங்களில் புகையத் தொடங்கியிருக்கிறது.
மேலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, அஜீத்துடன் நடிக்கவில்லையே என்று அனுஷ்காவிற்கு இருந்த மனக்குறையையும் இப்போது லிங்கா, என்னை அறிந்தால் படங்கள் தீர்த்து விட்டதால், 2015ல் ராணி ருத்ரம்மாதேவி, பாகுபாலி என்ற இரண்டு படங்களும் திரைக்கு வந்ததும் அனுஷகாவின் திருமண செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்றும் ஆந்திர சினிமா வட்டாரங்களில் இருந்து செய்திகள் கோடம்பாக்கத்துக்கு நோக்கி பரவி வருகின்றன.