Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யூனிட்டை கலகலப்பாக்கும் ஜெய்!

12 டிச, 2014 - 11:14 IST
எழுத்தின் அளவு:

நடிகர் விஜய்யின் தம்பியாக பகவதி படத்தில் அறிமுகமானவர் ஜெய். படத்துக்காக விஜய்யின் தம்பியாக நடித்தபோதும், அவர் நிஜத்திலும் அவர் தம்பி மாதிரிதான் இருப்பார். அதோடு, அந்த சமயத்தில் விஜய்யை போலவே படப்பிடிப்பு தளங்களில் அமைதியே உருவாக அமர்ந்திருப்பார் ஜெய். ஆனால், ஒருகட்டத்தில் அவர் சென்னை 28, சரோஜா படங்களில் நடித்தபோது வெங்கட்பிரபு, பிரேம்ஜி டீமுடன் சேர்ந்த பிறகு கலகலப்பான நடிகராக மாறி விட்டார்.


முக்கியமாக, இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் அவர் அடிக்கிற லூட்டிக்கு அளவே இல்லை என்கிறார்கள்.அதாவது படப்பிடிப்பு தளத்துக்கு வந்திறங்கும்போது, ஏதாவது ஒரு ஜாலி மேட்டரை பேசத் தொடங்கும் ஜெய், அதையடுத்து அதுசம்பந்தமாக எதையாவது பேசி யூனிட்டையே கலகலப்பாக்கி விடுகிறாராம்.


முக்கியமாக, காமெடி நடிகர்கள் யாராவது சிக்கினால், அவர்களை கலாய்க்கவும் தொடங்கி விடுகிறாராம். அதேசமயம், ஆக்சன் என்று டைரக்டரின் குரல் ஒலித்ததுமே அந்த கதாபாத்திரமாக அப்படியே மாறி விடுகிறாராம் ஜெய். ஆனால், டேக் ஓகே ஆனதும் மறுபடியும் தனது ஜாலி அரட்டையை ஆரம்பித்து விடுகிறாராம். அதனால் ஜெய் நடிக்கும் படங்களில் இடம்பெறும் கலைஞர்களுக்கு போரடிப்பதே இல்லையாம். அவரது ஜாலியான அரட்டை அரங்கத்தை அனைவருமே என்ஜாய் பண்ணுகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in