ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகராக இருந்த சிவகார்த்திகேயன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பாடகராகவும் உருவெடுத்தார். அந்தப்படத்தில் அவர் பாடிய வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து மான்கராத்தேயில் ராயபுரம் பீட்டர் பாடலை பாடினார். இப்போது தான் நடித்துள்ள காக்கிச்சட்டை படத்திலும் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அனிரூத்தின் இசையில், ''ஐயம் சோ கூல்'' என்ற பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ளார். எதிர்நீச்சல் படத்தை இயக்கிய துரை செந்தில்குமார் தான் காக்கிச்சட்டை படத்தையும் இயக்கியுள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் சிவகார்த்திகேயன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
அஜீத்தின், ''என்னை அறிந்தால்'', விக்ரமின் 'ஐ', விஷாலின், ''ஆம்பள'' படங்களோடு சிவகார்த்திகேயனின் ''காக்கிச்சட்டை'' படமும் ரிலீஸாக இருக்கிறது.