ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
“சீனிகம், பா” போன்ற ஹிந்திப் படங்களை இயக்கிய பால்கி தற்போது இயக்கி வரும் படம் 'ஷமிதாப்'. அமிதாப்பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் இந்தப் படத்திற்கு இயக்குனர் பால்கியின் அபிமான இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பிப்ரவரி 6ம் தேதி வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான பின்னணி இசைக் கோர்ப்பு வேலைகளை இளையராஜா ஆரம்பித்துள்ளார்.
இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் ஒரு பாடலையும், ஸ்ருதிஹாசன் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்கள். பால்கி - இளையராஜா கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த இரண்டு படங்களுமே மியூசிக்கலாகவும் சூப்பர் ஹிட்டான படங்களாக அமைந்தது. இளையராஜா என்னை வேண்டாமென சொல்லும் வரையில் அவர்தான் என்னுடைய படங்களின் இசையமைப்பாளர் என இளையராஜா மீது தீவிர அபிமானம் கொண்டவர் இயக்குனர் பால்கி. இன்றைய தமிழ்ப் பட இயக்குனர்களை விட இளையராஜா மீது, தெலுங்கு, மலையாளம், ஹிந்திப் பட இயக்குனர்கள் அதிக மரியாதையையும், கெளரவத்தையும் அவர் மீது வைத்திருக்கிறார்கள்.