ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூப் வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களுக்குள்ளேயே 10 லட்சம் பார்வையாளர்களையும், 50000க்கும் மேற்பட்ட லைக்குகளையும் அள்ளி அந்த டீசர் சாதனை படைத்த்து. தற்போது மேலும் ஒரு சாதனையாக இந்திய அளவில் அதிக லைக்குகளை அள்ளிய டீசர் என்ற புதிய சாதனையை சற்று முன் படைத்துள்ளது.
'என்னை அறிந்தால்' டீசருக்கு தற்போது 62000 லைக்குகள் கிடைத்துள்ளது. 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள டீசர்களிலேயே இந்திய அளவில் அதிகமான 'லைக்குகள்' பெற்று, ஒரு புதிய பரபரப்பை இந்த டீசர் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் விவகாரத்தில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
தற்போது 'என்னை அறிந்தால்' டீசர் சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் அதை தாங்கிக் கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் 'என்னை அறிந்தால்' டீசரைக் கிண்டலடித்து பல 'மீமீ'க்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து 'என்னை அறிந்தால்' டீசர் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.