ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோரது நடிப்பில் தமிழ்த் திரையுலகின் இந்த ஆண்டின் மிக முக்கியமான படமாக இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள படம் 'லிங்கா'. இதுவரை வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் வசூல் வரலாற்றை 'லிங்கா' முறியடிக்கும் என திரையுலகினரிடையே மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளது.
ரஜினிகாந்த் படங்களுக்கு ஹிந்தியிலும் எப்போதுமே ஒரு வரவேற்பு இருக்கும். பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவருடைய 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் கூட ரஜினிக்காகவே ஒரு பாடலை வைத்திருந்தார். அமிதாப்பச்சன், ஆமீர் கான் உட்பல பலரும் ரஜினியின் நண்பர்கள் வட்டத்திலும் ரசிகர்கள் வட்டத்திலும் இருக்கிறார்கள்.