ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமாவை விட்டு விலகி நடன நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த சுகன்யா தற்போது தீவிரமாக நடிப்பில் இறங்கி விட்டார். அம்புலி, ஆ படங்களை இயக்கிய ஹரி, ஹரீஷ் இயக்கும் ஜம்போ 3டி படத்தில் நடிக்கிறார் சுகன்யா. இந்தப் படத்தில் அவர் ஒரு ஜப்பானியரை திருமணம் செய்து கொண்டு ஜப்பானிலேயே செட்டிலாகிவிட்ட தமிழ் பெண்ணாக நடிக்கிறார். அங்கு பரநாட்டியம் கற்றுக் கொடுக்கும் கேரக்டர். இந்தப் படத்தில் கோகுல்நாத், அஞ்சனா ஹீரோ ஹீரோயினாக நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் சுகன்யாக நடித்த கேரக்டரில் மீனா நடிப்பதாக இருந்தது. சில காரணங்களால் அவருக்கு பதிலாக சுகன்யாக நடிப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஜி.ஹரி கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது: நான் ஜப்பானில் உள்ள டோக்கியோ தமிழ் சங்கத் தலைவராக இருக்கிறேன். இந்த சங்கத்தின் சார்பாக இங்கிருந்து நட்சத்திரங்களை அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்துகிறேன். தற்போது இந்தப் படத்தை தயாரிக்கிறேன். இது 90 சதவிகிதம் ஜப்பானில் நடக்கிற கதை. ஜப்பானில் நன்கு அறிமுகமான நடிகை மீனாதான். முத்து படத்தின் மூலம் அவருக்கு அங்கு பெரிய ரசிகர் வட்டம் இருக்கிறது. அதனால் ஒரு முக்கிய கேரக்டரில் அவரை நடிக்க வைக்க முயற்சித்தேன். வேறு படங்களில் அவர் பிசியாக இருந்ததால் அவரால் நடிக்க முடியவில்லை.