ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது ஜெகதீஷ் இயக்கும் நண்பேன்டா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். நண்பேன்டா படம் இன்னும் வெளியாகவில்லை. தயாரிப்புநிலையிலேயே இருக்கிறது. அதற்குள் உதயநிதிக்கு புதிய படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
நண்பேன்டா படத்தைத் தொடர்ந்து இதயம் முரளி என்ற படத்தில் நடிக்க உள்ளார். அதை முடித்துவிட்டு, கெத்து என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் அவர்.
கெத்து படத்திற்கான பூஜை சில தினங்களுக்கு முன் எளிமையாக நடைபெற்றது. மான் கராத்தே படத்தை இயக்கிய இயக்குநர் திருக்குமரன் இயக்கும் இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்ஸன் நடிக்கிறார். ஹன்சிகா, நயன்தாராவைத் தொடர்ந்து உதயநிதிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகியாகியிருக்கிறார் எமி. ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா படங்களைப்போலவே கெத்து படத்தையும் தனது ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் உதயநிதியே தயாரிக்கிறார். இப்படத்திற்கு மைனா, கும்கி படங்களில் பணிபுரிந்த சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்கிறார். கெத்து படத்தில் சந்தானம் நடிக்கவில்லை. அனேகமாக சூரி நடிக்கலாம் என்பதே தற்போதைய நிலவரம்.