ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கர்நாடக மாநிலம் பெங்களூரைச்சேர்ந்த நடிகர் ரஜினிகாந்த், 1950ல் டிசம்பர் மாதம் 12-ந்தேதி பிறந்த இவர், 1975-ல் கே.பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்து வந்த ரஜினி, பின்னர் தனி ஹீரோவாக உருவெடுத்து குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றினார். அந்த வகையில், இதுவரை 8 மொழிகளில் 170 படங்களில் நடித்திருக்கிறார் ரஜினி. தற்போது முத்து, படையப்பா படங்களைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் லிங்கா படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந்தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மேலும், அன்றைய தினம் ரஜினியின் லிங்கா திரைக்கு வருவது மட்டுமின்றி, ரஜினியின் 65வது பிறந்த நாள் என்பதால் அவருக்கும், அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தினமாக உள்ளது. அதோடு, ரஜினியின் அந்த பிறந்த நாளை பெரிய அளவில் கொண்டாட மீடியாக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. இதில், விஜய் டி.வி மற்ற சேனல்களை விட ரஜினியின் பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாம். அந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக ரஜினி பற்றிய சில கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறதாம். அதனால் அந்த நிகழ்ச்சிக்கு ரஜினி வந்தால் சிறப்பாக இருக்கும் என்பதால், அவரை அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தையில் தற்போது ஈடுபட்டிருக்கிறது விஜய் டி.வி நிர்வாகம்.