ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
மிஷ்கின் இயக்கும், ''பிசாசு'' படத்தில் பிசாசாக... மன்னிக்கவும் ஹீரோயினாக நடித்திருப்பவர் பிரயஹா. சமீபத்தில் தயாரிப்பாளர் பாலா, பிசாசு படத்தை பார்த்து விட்டு பிரயஹாவை மனதார பாராட்டியிருக்கிறார். அவர் பாராட்டில் என்ன சொன்னார் என்பதற்கு முன் பிரயஹாவை பற்றி சின்ன முன்னோட்டம்:
பல தேவதைளை தமிழ் சினிமாவுக்கு தந்த கொச்சின்தான் பிரயஹாவின் சொந்த ஊர். பிரயஹாவின் தாத்தா இ.ஜே.பீட்டர் அந்தக் காலத்தில் பெரிய தயாரிப்பாளர். அப்பா மார்ட்டின் பிசினஸ்மேன். அம்மா ஜிஜி குடும்பத்தின் தலைவி. அசின், அமலாபால் படித்த அதே கொச்சின் செயிண்ட் தெரசா காலேஜில்தான் பிரயஹா இப்போதும் படித்து வருகிறார்.
வாய்ப்பாட்டு, குச்சிப்புடி, மோகினி ஆட்டம், பரதநாட்டியம் ஆகியவற்றை முறையாக கற்றுக் கொண்டவர். 11வது படிக்கும்போதிருந்தே மாடலிங் செய்து வருகிறார். விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். ஒரு விளம்பரப் படத்தை பார்த்துவிட்டு தான் பிசாசு வாய்ப்பு வந்திருக்கிறது. இதுதான் ஒரு தேவதை பிசாசு ஆன கதை.
இனி படத்தை பார்த்துவிட்டு பாலா பிரயஹாவை அழைத்து பாராட்டியது: "நீ கடவுளின் குழந்தை. உன் எதிர்காலம் நன்றாக இருக்கும். எதற்கும் பயப்பட வேண்டாம். நல்ல அப்பா, அம்மா கிடைச்சிருக்காங்க. நல்ல கேரக்டரா செலக்ட் பண்ணி நடி" என்றார் பாலா. சினிமா சித்தன் சொன்னால் அது சிவன் சொன்ன மாதிரிதானே.