விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பாண்டியநாடு படத்தில் இமானின் இசையில் ரம்யா நம்பீசன் பாடிய பை பை பை கலாய்ச்சி பை என்ற பாடல் மெகா ஹிட்டானதையடுத்து, மேலும் சில நடிகைகளுக்கும் சினிமாவில் பின்னணி பாட வேண்டும் என்கிற ஆசை தலைதூக்கியது. அதில் லட்சுமிமேனன் குறிப்பிடத்தக்கவர். முக்கியமாக பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் பாடியதே இவருக்காகத்தான்.
தானும் ஒரு பாடகியாக இருந்தபோதும், தனக்கு இன்னொரு நடிகை பாடி அந்த பாடல் ஹிட்டாகி விட்டதை அடுத்து, இனிமேல் நானும் பாடப்போகிறேன் என்று களமிறங்கிய லட்சுமிமேனன், சில இசையமைப்பாளர்களை சந்தித்து தான் பயின்ற சில சங்கீத கீர்த்தனைகளை பாடி அசத்தினார். விளைவு, விமல் நடித்து வெளியான ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக குக்குரு குக்குரு என்ற பாடலை லட்சுமிமேனனை பாட வைத்தார் இசையமைப்பாளர் டி.இமான்.
அதையடுத்து,இப்போது பிரசாந்த் நடித்து வரும் சாகசம் என்ற படத்திற்காகவும் தமன் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இதன்பிறகு நீர்ப்பறவை, மதயானைக்கூட்டம் உள்பட பல படங்களுக்கு இசையமைத்த ரகுநந்தன் மற்றும் தாஜ்நூர் உள்ளிட்ட மேலும் சில இசையமைப்பாளர்களின் இசையிலும் அடுத்தடுத்து பாடப்போகிறாராம் லட்சுமிமேனன்.