விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜானவி தெலுங்கில் நாகார்ஜுனா - அமலா மகன் அகில் நாயகனாக அறிமுகமாக உள்ள படத்தில் நாயகியாக அறிமுகமாகப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜானவி, ஏற்கெனவே தமிழில் அறிமுகமாக உள்ளார் என சில வருடங்களுக்கு முன்பே தகவல் வெளிவந்தது. ஆனால், அதை அப்போது ஸ்ரீதேவியே மறுத்துவிட்டார்.
தெலுங்கின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வி.வி.விநாயக் இயக்க உள்ள இந்தப் படத்தில் அகில் ஜோடியாக ஒரு புதுமுகம் நடிக்க வேண்டும், அதுவும் அவர் மிகவும் பிரபலமானவராக இருக்க வேண்டும் என்ற ரீதியில்தான் தேடி வருகிறார்களாம். அதனால்தான் அவர்கள் ஸ்ரீதேவியின் மகளை நடிக்க வைக்கலாம் என்றும் யோசித்துள்ளார்களாம். ஸ்ரீதேவி, அகிலின் அப்பா நாகார்ஜுனா, தாத்தா நாகேஸ்வரராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்தவர். அதனால், அவர் அதற்கு சம்மதிப்பார் என்றும் சொல்கிறார்கள்.
ஸ்ரீதேவிக்கும் தெலுங்குத் திரையுலகம் மீது எப்போதுமே தனி பாசம் உண்டு. ஏனென்றால் ஸ்ரீதேவி தமிழில் குழந்தை நட்சதிரமாக அறிமுகமாக கதாநாயகியாக மாறினாலும், தமிழை விட தெலுங்கில்தான் அவர் எந்த போட்டியுமே இல்லாமல் நம்பர்1 நடிகையாக விளங்கினார், அதிகமான சம்பளமும் வாங்கினார். அதோடு தெலுங்கு அவரது தாய்மொழியும் கூட. அதனால் ஸ்ரீதேவி, அவருடைய மகள் ஜானவியை தெலுங்குப் படத்தில்தான் முதலில் அறிமுகப்படுத்துவார் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.