Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை : மன்னாரா

29 நவ, 2014 - 18:11 IST
எழுத்தின் அளவு:

ஜித் படத்தின் போஸ்டர்களை பார்த்தவர்கள், அப்படத்தில் நடித்த மன்னாராவை பற்றி பேசாமல் இருக்க மாட்டார்கள். மன்னாராவை பற்றி, மீடியாக்கள் மட்டுமல்லாது, ரசிகர்களும் பேசத் துவங்கி விட்டார்கள். பெரும்பாலும், படங்கள் வெளியானபின்பு தான், படத்தில் நடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின்கள் பற்றி மக்கள் பேசுவார்கள். ஆனால், ஜித் படம், 28ம் தேதி தான் வெளியானது. அதற்கு முன்னரே, ஜித் பட போஸ்டரை பார்த்ததில் இருந்து, மன்னாராவை பற்றி, மக்கள் பேசத்துவங்கி விட்டனர். பிரியங்கா சோப்ராவின் தங்கையான மன்னாரா, ஜித் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்..


கியூட் அண்ட் பப்ளி கேரக்டர்




ஜித் படத்தில், கியூட் அண்ட் பப்ளி கேரக்டரில் நடித்துள்ளேன். படத்தில் என்னுடைய பெயர் மாயா. இந்த கேரக்டரை, தான் மிகவும் விரும்பி செய்தேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நினைக்கிறேன். நிமிடங்களில், தனது உணர்ச்சிகளை மாற்றிக்கொள்ள கூடியவள் மாயா. ஒரு சமயத்தில் சிரிக்கும் மாயா, அடுத்த நிமிடமே, கோபத்தில் கத்த துவங்கிவிடுவாள். எளிதில் உணர்ச்சிவசப்படும் கேரக்டரில் தான் நடித்துள்ளேன். ரசிகர்களுக்கு, இந்த கேரக்டர் மிகவும் பிடிக்கும். இந்த நேரத்தில், மாயா முதல்முறையாக வாலிபருடன் காதல் கொள்கிறார். பின் நடப்பது தான் கதை.


கரன்வீர் நல்ல நடிகர்




கரன்வீர், சிறந்த நடிகர் மட்டுமல்லாது, தன்னுடன் இணைந்து நடிப்பவர்களை, அரவணைத்து செல்பவர். அவருடன் நடித்த பொழுதை, மிகவும் ரசித்தேன். கரன்வீர் வியக்கத்தக்க மனிதர். அவருக்கு சிறந்த நடிப்புத்திறமை இருப்பது மட்டுமல்லாது, தொழில்நுட்பங்களையும் கரைத்துக்குடித்துள்ளார். இயக்குனரின் மகன் என்பதை, அவரது செயல்கள் சொல்லாமல் சொல்கின்றன. அவரிடம் நான், பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டதோடு மட்டுமல்லாது, முக்கியமான விசயங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். சூட்டிங்கின் போது, எவ்வாறு கேமரா முன் நிற்க வேண்டும் மற்றும் ஒரு சீனை இயக்குவது எப்படி குறித்து நான் அவரிடம் கற்றுக்கொண்டேன்.


மன்னாரா எனது நிஜப்பெயர் அல்ல...




ஆமாம். மன்னாரா என்பது எனது நிஜப்பெயர் இல்லை. எனது உண்மையான பெயர் பார்பி. எனது நண்பர்களிடம், தான் விரைவில் பெயரை மாற்ற இருப்பதாக கூறிக்கொண்டிருந்தேன். ஏனெனில், பார்பி என்பதற்கு, அழகான குழந்தை என்று பொருள். நான் தற்போது ஒன்றும் குழந்தை அல்ல. என்வே தான் பெயரை மாற்றிக்கொண்டேன். எனக்கு M எழுத்தில் துவங்கும் பெயர்கள் பிடிக்கும். எனது சகோதரி மெடாலி்யை வைத்து இதை தான் சொல்லவில்லை. மாதுரி தீட்சித் பெயரும் M என்ற எழுத்தில் துவங்குகிறது. நான் மாதுரி தீட்சித்தின் மிகப்பெரிய ரசிகை.


யாருடைய சிபாரிசும் எனக்கு தேவையில்லை




நான் நடிக்கும் படங்கள் எல்லாம், எனது திறமையை பார்த்து தான் கிடைத்ததே தவிர, எனது அக்கா பிரியங்கா சோப்ராவின் சிபாரிசினால் கிடைத்தது அல்ல, என்பதை இங்கு தெரிவித்துக்கொள்கிறேன். எனது நலனிற்கு, அக்கா பிரியங்கா சோப்ரா, அம்மா மற்றும் உறவினர்கள் பாடுபடுகின்றனர், இதில் எனக்கு எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. ஆனால், அதற்காக, பிரியங்கா சோப்ராவினால் தான் எனக்கு படவாய்ப்பு கிடைக்கின்றது என்பது முற்றிலும் தவறு. பிரியங்கா சோப்ரா பெரிய நடிகை தான். அதற்காக, அவர் சம்பாதித்த பணத்தை தனக்கு செலவழிக்க வேண்டும் என்று சொல்வதில் நியாயமில்லை. என்னால் என்ன முடியுமோ, எனது திறமைக்கு ஏற்ற படங்களை தான் தேர்வு செய்து நடித்து வருகிறேன்.


இது எனது இனிய துவக்கம்...




திறமைமிக்க நடிகைகளை படங்கள் தான் எப்போதும் தேர்ந்தெடுக்கின்றன. அதுபோலத்தான் நானும். நான் எப்போதும் படங்களை தேர்ந்தெடுப்பதில்லை. என்னுடைய திறமைகளை பார்த்து, படங்கள் தான் என்னை தேர்ந்தெடுக்கின்றன. என்னுடைய முதல் படத்திலேயே, சரியான துவக்கம் கிடைத்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டச்வுட் போன்ற நடிகர்களுக்கு இதுபோன்ற அனுபவம் கிடைத்துள்ளது.




பிரியங்கா சோப்ராவின் மிகப்பெரிய ரசிகை




நடிகை பிரியங்கா சோப்ராவின் மிகப்பெரிய ரசிகை நான். இதை சொல்வதில் எனக்கு எந்தவொரு தயக்கமுமில்லை. அவளின் பழக்க வழக்கங்கள், நடைமுறை வாழ்க்கை போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். உறவுகளை எவ்வாறு பேணிகாப்பது என்பதை அவளிடம் இருந்து நான் தெரிந்துகொண்டேன். என்னிடம், பிரியங்கா சோப்ரா, நடிகை என்ற கர்வம் கொண்டதில்லை. எப்போதும் என்னை சகோதரியாகவே நினைத்துக்கொள்வாள். பாலிவுட் திரையுலகில், அவளை போன்ற நடிகையை, இதுவரை நான் கண்டதில்லை.


நான் பிடிவாதக்காரி




ஆமாம். நடைமுறை வாழ்க்கையில் நான் மிகவும் பிடிவாதக்காரி. எனக்கு எது நல்லது என்று நினைக்கிறேனோ..அதை உறுதியாக செய்துமுடிப்பேன். நான் மும்பை வந்தபோது, விளம்பர படங்களில் நடிக்க எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. எனது அம்மா கூட, விளம்பர படங்களில் நடித்தால், விரைவில் பிரபலமடையலாம் என்று கூறினார். எனக்கு அது சரியாகப்படவில்லை. திரையுலகில் தான் நான் அறிமுகமாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால், விளம்பரப் படங்களில் நடிக்கவில்லை. இறுதியாக, திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. என்னுடைய படமும் தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இது எனக்கு மிகவும மகிழ்ச்சியை அளித்திருக்கிறது என்று மன்னாரா கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in