பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
ஏற்கனவே பஞ்சாபில் இருந்து வந்த பூனம் பாஜ்வா தமிழ்ப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கச்சேரி ஆரம்பம், சேவல், துரோகி என பல படங்களில் நடித்த அவர் தற்போது ஜெயம்ரவி நடிக்கும் ரோமியோ ஜூலியட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அதே பஞ்சாபில் இருந்து இப்போது சோனம் பாஜ்வா என்றொரு நடிகையும் தமிழுக்கு வந்திருக்கிறார். வைபவ் நடித்துள்ள கப்பல் படத்தில் அறிமுகமாகியிருக்கும் அவருக்கு அந்த படத்தில் கமிட்டானபோது பெரிய எதிர்பார்ப்பு இல்லையாம். வைபவ் நாயகனாக நடித்த டுமீல் பெரிய ஹிட் இலலை என்பதால் ஒரு சிறிய ஹீரோ படத்தில்தான் நடிக்கிறோம் என்ற மனநிலையில்தான் நடித்து வந்திருக்கிறார்.
ஆனால், இப்போது அந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் வாங்கி வெளியிடுவதால் அந்த படத்திற்கு பெரிய அளவில் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட்டு எப்படியும் படத்தை ஓட வைத்து விடுவார் என்ற நம்பிக்கையில், அடுத்து கோடம்பாக்கத்தில் ஆழமாக காலூன்றும் முயற்சிகளில் இறங்கி விட்டார் சோனம் பாஜ்வா.