ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பெரிய நட்சத்திரங்கள், இயக்குனர்களின் படங்களுக்குத்தான் முதல் பார்வை வெளியீடு என்பதெல்லாம் இருக்குமா, எங்களுக்கெல்லாம் கிடையாதா என தற்போது பலரும் முதன் முதல் என பல விஷயங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார்கள். 'எதிர் நீச்சல்' படத்திற்குப் பிறகு துரை. செந்தில் குமார் - சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'காக்கிச் சட்டை'. இந்தப் படத்தின் ஒரு புகைப்படத்தைக் கூட இதுவரை தப்பித் தவறி அவர்கள் வெளியிடவில்லை. இணையங்களில் மட்டும் சில படங்கள் லீக் ஆனது. இப்படி ஒரு படம் எப்போது ஆரம்பிக்கப்பட்டு, நடைபெற்று முடிந்தது என்பதே தெரியாள அளவிற்கு படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டார்கள்.
சிவகார்த்திகேயன் முதன் முறையாக போலீஸ் கெட்-அப்பில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பார்வை, மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் ஆகியவற்றை நாளை வெளியிட உள்ளார்களாம். இது பற்றி படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தே தெரிவித்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தை அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியிட உள்ளார்கள். படத்தில் சிவகார்த்திகேயன், சிரிப்பு போலீஸா அல்லது சீரியஸ் போலீஸா என்பது கூட இனிமேல்தான் தெரிய வரும். படத்தைப் பற்றிய பல விஷயங்களை ஏன் இவ்வளவு ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை.