Advertisement

சிறப்புச்செய்திகள்

அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!!

01 ஆக, 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

தமிழ் சினிமாவில் நடிகையாக என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் எனக் கேட்கப்படும் கேள்விக்கு, "வசனங்களை உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; அழகாக இருக்க வேண்டும்' என பதிலளிப்பவர் நீங்களா... ஸாரிங்க..., அந்தக் காலம் மலையேறி பல மாமங்கம் கடந்துவிட்டது.

சமீபத்திய நிலவரப்படி, "கேரளாவில் பிறந்திருக்க வேண்டும். தமிழ் தெரியக் கூடாது. தெரிந்தாலும் பேசிவிடக் கூடாது. கேள்விப் பட்டிராத பெயரைத் தேர்ந்தெடுத்து அதற்குள் ஒளிந்துகொள்ள வேண்டும்' இவைதான் தமிழ் சினிமா நடிகையாவதற்கான இன்றைய தகுதிகளாக இருக்கின்றன.

"அ' திரை நிறுவனம் தயாரிப்பில் அறிமுக டைரக்டர் கீரா இயக்கும், "பச்சை என்கிற காத்து' படத்தில் கதாநாயகியாக நடிப்பவரும் கேரளப் பெண்தான். படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்தப்பில் கலந்துகொள்ள வந்த அவர், "டைரக்டர் எனது பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறினார். நான் ஒரு 15 பெயர்களைத் தேர்வு செய்திருந்தேன். அதைக் கேட்ட டைரக்டர், "இதெல்லாம் வேண்டாம். இனி உன் பெயர் தேவதை' என்றார். நல்ல ஸ்டைலான பெயரா வைப்பார் என நினைத்த எனக்கு, பெரிய ஏமாற்றம்' என்றார்.

பின், தமியாளத்தில் அவர் பேசுகையில், "என்னுடைய அடுத்த இடத்துக்கு போறதுக்கு, சரியான தளம் இந்தப் படம். நான் பார்த்த ஃபேன்டஸி படங்கள் மாதிரி அல்ல இந்தப் படம். என்னுடைய மாநிலத்தில் சமீபகாலமாக நல்ல படங்கள் வருவது குறைந்துவிட்டது. மலையாளத்தின் சிறந்த டைரக்டர்கள் கூட, தமிழ்ப் பக்கம் வர ஆரம்பித்துவிட்டனர். அதனால் எனது முதல் படம் தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்ததை விட ஒரு சிறந்த படத்தில், ஹீரோவுக்கு இணையான பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்'

ம்... தேவதைக்கும் தேவைகள் இருக்கிறது...!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

hariharan - Malaysia,இந்தியா
02 ஆக, 2010 - 12:00 Report Abuse
 hariharan கருணாநிதிக்கு எப்போதும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கும் திரைப்பட தயாரிப்பாளர்களே தாத்தாவோட தமிழ் ஆசையை நிறைவேற்றுங்கள். தமிழ் நடிகைகளை வைத்து படம் எடுங்கள்
Rate this:
ramesh - pondy,இந்தியா
02 ஆக, 2010 - 09:59 Report Abuse
 ramesh why can't these stupid directors understand that tamil movies requires tamil actresses. Will these idiots will accept , if all producers make move with malayala directors??????
Rate this:
jayanantham - india,இந்தியா
01 ஆக, 2010 - 23:33 Report Abuse
 jayanantham இது பிடிக்காத பெயர் என்றால் "தேவி ஸ்ரீ " என வைத்துக் கொள்ளலாமல்லவா!
Rate this:
மல்லூ பாலு - cochin,இந்தியா
01 ஆக, 2010 - 21:37 Report Abuse
 மல்லூ பாலு மலையாள நடிகைகளை அறிமுக செய்யும் தமிழ் இயக்குனரை ஒரு கேள்வி கேக்குறேன். தமிழ் பெண்கள் உங்கள் பார்வைக்கு தெரியலயா, உங்கள் காம பார்வைக்கு கேரளா பெண்கள் தான் தேவயா
Rate this:
rajan - marthandam,இந்தியா
01 ஆக, 2010 - 21:08 Report Abuse
 rajan தமிழ் பொண்ணுகள் சினிமா வுக்கு வராமல் இருப்பது தான் நல்லது
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in