14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
"வளர்ந்துட்டம்னா பத்து வருஷத்துக்கு முன்னாடி போட்ட துணிகள் பத்தாது' என்பது எதார்த்தம். "பத்தாத துணியை போட்டால், பத்து வருஷம் குறைஞ்சிடும்' என நினைப்பது குதர்க்கம். இதற்கு சற்றும் சளைக்காது, கிசுகிசு குறித்து லட்சுமிராய் கொடுத்த விளக்கம். கற்க கசடற மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான இவர், தொடர்ந்து கிசுகிசுக்களில் அகப்பட்டு வருபவர். நடிகர் பிரகாஷ்ராஜ், கிரிக்கெட் கேப்டன் டோனி ஆகியோருடன் இணைத்துப் பேசப்பட்ட லட்சுமிராய், தற்போது நடிகர் லாரன்சுடன் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசு கிளம்பி உள்ளது.
"இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பெண் சிங்கம்' தொடர்ந்து தற்போது லாரன்ஸின் "காஞ்சனா'விலும் இவர் தான் ஹீரோயின். உங்களைச் சுற்றி மட்டும் ஏன் இத்தனை கிசுகிசுக்கள் வருகின்றன எனக் கேட்டாலோ, "நான் வளர்ந்ததை அளக்கும் கருவிதான் கிசுகிசுக்கள். இதைப் பற்றி கவலையில்லை' என்கிறார்.