ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தான்சானியாவில் அல்பினோஸ் என்ற வகை மக்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள். 2008 முதல் 2010 வரை சூனியக்காரர்களின் உந்துதலால் , 200க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. "அல்பினோஸ் இறப்பதில்லை, ஆனால் மறைந்து போகிறார்கள்" என்று அங்கு பேச்சு மொழி உண்டு.
பன்னிரெண்டு வயது அல்பினோ சிறுவன் "அலியஸ்" அனுபவங்கள் தான் இந்த படம். அலியஸ்ஸின் தந்தை, முகம் தெரியாதவர்களால் கொலை செய்யப்படுகிறார். அவன் தாய், லாரி டிரைவரான தன் சகோதரர் காஸ்மோஸ்ஸிடம் அலியஸை அனுப்புகிறாள். அங்கு வேறுசில சிறுவர்களுடன், அலியஸ், ஸிடிக்கள், கூலிங்கிளாஸ் போன்றவைகளை, நகரின் தெருக்களில் விற்கிறான். சிலசமயம், குப்பைகள் கொட்டப்படும் இடங்களில், கம்ப்யூட்டர் கீபோர்டு பாகங்கள் போன்றவற்றை பொறுக்கி எடுத்து விற்கிறான். விற்கும்போது, சில சமயம் அங்கிளுக்கு தெரியாமல் பணத்தை எடுத்துக்கொள்கிறான். காஸ்மோஸின் 12 வயது மகளுக்கும், அலியஸூக்கும் இடையே மெல்லிய நட்பு வளர்கிறது. காஸ்மோஸீற்கு அது பிடிக்கவில்லை. அலியஸ்ஸை தரத்துகிறான். பணம் திருப்பித்தரவில்லை என்று பணம் கொடுக்க ரவுடிகள் காஸ்மோஸை அடித்து துன்புறுத்துகிறார்கள். மற்றொரு நாட்டுக்கு அலியஸ்களின் பயணம் தொடர்கிறது....
" நல்ல மனிதனாக நடந்து கொள். வங்கியில் பணத்தை சேமித்து வை, ஆணுறை உபயோகப்படுத்து, எய்ட்ஸ் பெற்றுவிடாதே, கெட்டவர்களுடன் சேராதே, 12 வயது மகனுக்கு அம்மா, அனுப்பி வைக்கும்போது சொல்லுவார்.
கதை, படமாக்கப்பட்ட விதம், லொகேசன் எல்லாவற்றிலும் சுமார் ரகம்! ஜெர்மனியை சேர்ந்த நோவாஸ் டேசே இயக்குனரின் முதல்படம்.
கோவாவிலிருந்து எஸ்.ரஜத்.