சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் அனேகன். இந்த படத்தில் தனுஷ் நடிக்க வருவதற்கு முன்பு பல மாதங்களாக அவருக்காக காத்திருந்தார் ஆனந்த். பின்னர், அவர் வந்த பிறகு படப்பிடிப்பை நகர்த்தினார். ஆனால் படம் அரைகிணற்றை தாண்டியபோது, திடீரென்று ஒருநாள், தனக்கு பால்கி இயக்கும் இந்தி படத்தில் சான்ஸ் வந்திருப்பதாக கூறிய தனுஷ், நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான வேடம். அந்த படத்தை விட மனசில்லை என்று கே.வி.ஆனந்திடம் முறையிட்டிருக்கிறார்.
விளைவு, நல்ல வேடம் என்றால் விட வேண்டாம். அவர்கள் கேட்ட தேதியை கொடுங்கள். நான் அதுவரைக்கும் படப்பிடிப்பை நிறுத்தி வைக்கிறேன் என்று அவர் கூற, ஷமிதாப் என்ற அந்த இந்தி படத்தில் கமிட்டானார் தனுஷ். அதுவும் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கும் வாயப்பு. ஆக, அந்த படத்தில் நடித்து விட்ட அவர் வந்தபிறகு மறுபடியும் அனேகன் படப்பிடிப்பை தொடங்கினார் கே.வி.ஆனந்த்.
அதனால், அனேகன் படத்தில் ஆடியோ விழாவில், கே.வி.ஆனந்த் மட்டும் கால்சீட்டை அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவில்லை என்றால் நான் ஷமிதாப் படத்தில் நடிக்க சாத்தியமே இல்லை. வேறு யாராக இருந்தாலும் தன் படத்தை நிறுத்தி விட்டு வேறு படத்தில் நடிக்க சம்மதிக்க மாட்டார்கள் என்று கே.வி.ஆனந்தின் பெரிய மனசு பற்றி பெருமையாக பேசினார் தனுஷ.