ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சீயான் விக்ரமின் கேரியரில் ஐ முக்கியமான படம். இந்த படத்திற்காக இதுவரை எடுத்த ரிஸ்க்கை விட அதிக ரிஸ்க எடுத்திருக்கிறார். அந்த வகையில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடின உழைப்பை கொட்டியிருக்கிறார் விக்ரம். அவரது உழைப்பை அப்படத்தில் பங்குபெற்ற அனைத்து நபர்களுமே ஆச்சர்யமாக சொல்லி வருகிறார்கள்.
அப்படி நடிப்புக்காக எந்த தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கும் விக்ரம், அந்த படத்தில் தான் நடித்திருக்கும் கூனன் என்ற கேரக்டருக்காக நடிக்கும்போது எவ்வளவு கஷ்டப்பட்டாரோ, அதற்கும் மேலாக டப்பிங் பேசும்போதும் கஷ்டப்பட்டிருக்கிறாராம். அதாவது, தமிழ், தெலுங்கு இந்தி என மூன்று மொழிகளிலும ஐ படத்திற்காக டப்பிங் பேசியிருக்கும் விக்ரம், அந்த கதாபாத்திரத்திற்கேற்ப குரலை மாற்றிப்பேசுவதற்காக தனது கையால் தொண்டையை இறுக்கிப்பிடித்தபடி பேசியிருக்கிறார்.
இப்படி தமிழில் மட்டுமின்றி, தனக்கு பரிட்சயமில்லாத தெலுஙகு. இநதியிலும் பேசியிருக்கிறார். அந்த வகையில் ஒவ்வொரு கெட்டப்புக்கும் ஏற்ப நடிப்பை வித்தியாசப்படுத்தியது மட்டுமின்றி, டபபிங்கையும் வித்தியாசபபடுத்தி அந்த கதாபாத்திரங்களை வேறுபடுத்தி காண்பித்திருக்கிறாராம் விக்ரம.
மேலும், தான் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பு பல நடிகர்களுக்கு டப்பிங் கொடுத்து வந்தவர்தான் விக்ரம், அந்த வகையில், பிரபுதேவா நடித்த காதலன் படத்தில் அவருக்கு இவர்தான் டப்பிங் பேசியிருந்தாராம். பிரபுதேவாவின் குரலைப்போன்று தனது குரலை மாற்றி பேசியிருந்ததால் யாராலும் பிரபுதேவாவுக்கு குரல் கொடுத்திருப்பவர் விக்ரம் என்று கண்டுபிடிக்க முடியவில்லையாம். அவர் மட்டுமின்றி, அந்த காலகட்டத்தில் பல நடிகர்களுக்கும் அவர் சாயலிலேயே டப்பிங் பேசி தனது குரல்வளத் திறமையை நிரூபித்து வந்திருக்கிறார் விக்ரம்.