ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தனது 14 வயதில் கும்கி படத்தில் நடித்தவர் லட்சுமிமேனன். ஆனால் தனது வயதுக்கு மீறிய மெச்சூரிடடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அதனால் அடுத்தடுத்து படங்களில் புக்காகி முன்னணி நடிகையானார். கிளாமர் என்பதே துளியும் இல்லாமல், திறமையை மட்டுமே முன்வைத்து அவர் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது மார்க்கெட்டில் இருந்த நடிகைகளுக்கு அச்சத்தையும, ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.
ஆனபோதும், ஜிகர்தண்டா படத்தின் தோல்வி, லட்சுமிமேனனின் மார்க்கெட்டையும் கவிழ்த்து விட்டது. இதனால் அவர் இடத்தை கைப்பற்ற ப்ரியாஆனந்த், ஸ்ரீதிவ்யா இருவருமே வரிந்து கட்டி நிற்கின்றனர். ஆனால், தற்போது கொம்பன் படத்தில் கார்த்தியுடன் நடித்து வரும் லட்சுமிமேனன், இந்த படத்தில் இனனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்.
அதனால், கொம்பன் படத்தில் ஒவ்வொரு காட்சிகளிலும் குடும்ப பெண்கள் கண்கலங்க வைக்கும் வகையில், நடிக்கும் லட்சுமிமேனன், ஒரு காட்சியில் யூனிட்டே கலங்கிப்போகும் அளவுக்கு கிளிசரினே இல்லாமல் கதறி அழுதபடி நடித்துள்ளாராம். இந்த காட்சி கண்டிப்பாக தியேட்டருக்கு வரும் ரசிகர்களை அழ வைக்கும் என்கிறார்கள்.