Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

நான் அனுஷ்காவின் தங்கை: அதிதி செங்கப்பா

21 நவ, 2014 - 15:07 IST
எழுத்தின் அளவு:

ர படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் அதிதி செங்கப்பா. பெங்களூரு தக்காளி. நோ கிளாமர், ஒன்லி ஆக்டிங் பாலிசியோடு வந்திருக்கிறார்.




அவர் அளித்த பேட்டி


ர படம் அனுபவம் எப்படி?


எனக்கு பேய் என்றாலே பயம். நான் பேய் படமெல்லாம் பார்க்கவே மாட்டேன். கார்ட்டூனில் பேய் படம் போட்டாலும் பார்க்க மாட்டேன். அப்படிப்பட்ட நான் பேய் படத்தில் நடித்திருக்கிறேன். நடிப்புக்காக பயந்தேன் என்பதை விட நிஜத்திலேயே பேய் மேக்அப்பை பார்த்து பயந்தேன் என்பதுதான் உண்மை. இந்த படத்தை நான் கண்டிப்பாக பார்த்துதான் ஆகவேண்டும். காரணம் நான் நடித்த படமாச்சே...


அப்பா பத்திரிகை ஆசிரியராமே...?




என்னோட அப்பா ராஜ் செங்கப்பா, தி டிரிபியூன் பத்திரிக்கையில் முதன்மை ஆசிரியராக இருக்கிறார். எங்க அப்பாவை பார்க்க சினிமா நட்சத்திரங்கள் வருவாங்க. அவங்க உங்க பொண்ணு அழகாக இருக்கா. சினிமால நடிக்க வையுங்கன்னு சும்மா வேடிக்கைக்காக சொல்வாங்க. அதுவே என் மனசுல பதிஞ்சு சினிமால நடிக்கணுங்கற ஆசைய தூண்டிவிட்டிருச்சு. அப்புறம் முறைப்படி நடனம், நடிப்பு கத்துக்கிட்டு சினிமாவுக்கு வந்துட்டேன்.


பெங்களூரில் பிறந்தவர் தெலுங்கு படத்தில் அறிமுகமாகியிருக்கீங்களே?


தகிட தகிட தெலுங்கு படத்துலதான் அறிமுகமானேன். ஆனால் நான் அறிமுகமாக விரும்பியது தமிழ் படத்தில்தான் அது நடக்கல. சில ஆடிசன்களுக்கு வந்து செலக்ட் ஆகல. தெலுங்குலதான் வாய்ப்பு கிடைச்சுது நடிச்சேன்.


தமிழில் பேய் படத்தில் அறிமுகமாகுறீங்களே?




கொஞ்சம் காபி கொஞ்சம் காதல் என்ற படம்தான் என்னோட அறிமுக படம். அந்த படம் முடிஞ்சி ரொம்ப நாளாச்சு. இன்னும் ரிலீசாகல. அதுக்கு பிறகு வந்த படம்தான் ர.




அடுத்த வாய்ப்புகள்...?




ர படத்துக்கு பிறகு வரும் என்று நம்புகிறேன். கொ.கா.கொ.கா ரிலீசானாலும் நல்ல ரீச் கிடைக்கும். இப்போது எஸ்.பி.பி.சரண் தயாரிக்கும் மூணே மூணு வார்த்தை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன்.


அனுஷ்காவோட தங்கையாக நடிக்கிறீங்களாமே?




ஆமாம் தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் ருத்ரமாதேவி படத்தில் அவரது தங்கை ஞானபத்மாவாக நடிக்கிறேன். அதில் தங்க நகைகள் நிறைய அணிந்து இளவரசியாக நடித்துள்ளேன். அனுஷ்கா எங்க அப்பாவுக்கு நன்கு அறிமுகமானவங்க. படப்பிடிப்பின்போது என்னை ஒரு தங்கை மாதிரியே கவனிச்சிக்கிட்டாங்க. அனுஷ்காவை மேடம்னுதான் முதல்ல கூப்பிட்டேன். அக்கான்னே கூப்பிடுன்னு சொன்னாங்க. அதுலேருந்து அவங்க எனக்கு நிஜமான அக்காவாவிட்டாங்க.


எல்லா நடிகைக்கும் இந்திப் பட ஆசை இருக்கும் உங்களுக்கு இருக்கா?-


ஹலோ... நான் அல்ரெடி எக்ஸ் என்ற இந்திப் படத்தில் ஹீரோயினா நடிச்சு முடிச்சிட்டேன்.. ஜனவரியில ரிலீசாகுது.


தமிழ்ல எப்படி வளர விரும்புறீங்க?




அடுத்த வீட்டு பெண் மாதிரி ரசிகர்களுக்கு தோன்றணும், நம்ம வீட்டு பெண் மாதிரி பெண்களுக்கு தோன்றணும். அப்படிப்பட்ட படங்களில் நடிக்க விரும்புகிறேன். எந்த காலத்திலும் கவர்ச்சியாகவும், கிளாமராகவும் நடிக்க மாட்டேன்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in