இனி தொடர்ச்சியாக காமெடி படங்களில் சந்தானம் நடிக்கணும் : சிம்பு வேண்டுகோள் | பாரிஸ் தேவாலயத்திற்கு சென்ற நயன்தாரா | பிளாஷ்பேக்: “போஸ்ட் சின்க்ரனைசேஷன்” முறையில் ஒலிப்பதிவு செய்து, வெற்றி கண்ட முதல் தமிழ் திரைப்படம் “ஸ்ரீவள்ளி” | விவாகரத்து பெற்ற நடிகரை காதலிக்கிறாரா மிருணாள் தாக்கூர்? | மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ் | டிரம்ப்-ன் வரிவிதிப்பு அறிவிப்பு: இந்தியப் படங்களுக்கு என்ன பாதிப்பு? | நாகார்ஜூனாவின் 100வது படம்: தமிழ் இயக்குனர் இயக்குகிறார் | கொடைக்கானலில் இருந்து சென்னை திரும்பிய விஜய் | மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர் | தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ் |
நடிகர் திலகம் சிவாஜிகணேசன், சரோஜா தேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், மனோரமா நடிப்பில் 1964ம் ஆண்டு திரைக்கு வந்து சக்கை போடு போட்ட படம் புதிய பறவை. 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தை சிவாஜி பிக்சர்ஸ் தயாரிப்பில், தாதா மிராஸ் இயக்கியிருந்தார். தற்போது சிவாஜி கணேசனின் 9வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை சாந்தி தியேட்டரில் புத்தம் புது டிஜிட்டல் காப்பியாக திரையிடப்பட்டுள்ளது. புதிய படங்களுக்க இணையாக தியேட்டரை சுற்றிலும் சிவாஜி ரசிகர்கள் கட்-அவுட்களை வைத்துள்ளனர். ரசிகர்கள் பலர் சிவாஜி கட்-அவுட்டுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
புதிய பறவை படம் 1964ம் ஆண்டு பாரகன் தியேட்டரில் திரையிடப்பட்டது. அந்த காலகட்டத்திலேயே நல்ல வசூலை வாரி குவித்த இந்த படம் இப்போதும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருக்கிறதாம்.