'மண்டாடி' : சூரியின் அடுத்த படம் | மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ... தவறான தகவல்களை பரப்பாதீங்க.... : குடும்பத்தினர் அறிக்கை | என்னை பற்றி என் தயாரிப்பாளர்களிடம் கேளுங்கள்: பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் | பிளாஷ்பேக் : மம்பட்டியான் பாணியில் உருவான கொம்பேரி மூக்கன் | தன்னை போன்று குறைபாடு உடையவரையே மணந்த அபிநயா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனி இசை அமைக்கும் இன்னொரு தமிழர் | அர்ஜுன் இளைய மகளுக்கு டும் டும் : இத்தாலி தொழில் அதிபரை மணக்கிறார் | பிளாஷ்பேக்: நாரதராக வாழ்ந்த நாகர்கோவில் மகாதேவன் | குட் பேட் அக்லி ஓடிடி-யில் வெளியாவது எப்போது | சூரி படத்துக்கு ஓடிடி-யில் இழுபறி |
முதல் ரவுண்டை விட இப்போதுதான் ரொம்ப பிசியாக இருக்கிறார் நயன்தாரா. இது நம்ம ஆளு, தனி ஒருவன், நண்பேன்டா, மாஸ் உள்பட 5 படங்களில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். தவிர மம்மூட்டியுடன் ஒரு மலையாள படத்திலும் நடிக்கிறார். ஆக, நயன்தாராவின் கால்சீட் டைரி புல்லாக இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தற்போது தனுஷ் தயாரிப்பில் விஜயசேதுபதி நடிக்கும் நானும் ரெளடிதான் படத்தில் நடிக்கவும் கால்சீட் கொடுத்திருக்கிறார் நயன்தாரா. ஆனால், தனி ஒருவன் படத்தின் படபபிடிபபு லொகேசன் பிரச்சினை காரணமாக சில பகுதிகளில் திடீர் திடீர் என்று ரத்து செய்யப்பட்டதால், நயன்தாராவின் கால்சீட்டில் நிறைய பிரச்சினைகளாம்.
அதனால்தான் இந்த மாதம் தொடக்கத்திலேயே நானும் ரெளடிதான் படத்தில் நடிக்க கால்சீட் கொடுத்திருந்த நயன்தாரா, இதோ அதோ என்று இழுத்தடித்துக்கொண்டு வருகிறாராம். ஆனால் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கும் விஜயசேதுபதியோ, நயன்தாராவுடன் நடிக்கப்போகிற ஆர்வத்தில் சொன்னபடி கால்சீட் தேதியை ப்ரீ பண்ணி வைத்திருந்தாராம். ஆனால் இபபோது அவர் ரெடியாகவில்லை என்பதால், அந்த தேதியை வேறு படத்துக்கு கொடுத்து நடித்துக்கொண்டிருக்கிறாராம்.