ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
சுசீந்திரன் இயக்கிய படம் ஆதலால் காதல் செய்வீர். அப்படத்தில் புதுமுகம் சந்தோஷ்-மனீஷா யாதவ் நடித்திருந்தனர். நாட்டில் அனாதை குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் என்பதற்கு நல்லதொரு உதாரணத்தை சொல்லும் வகையில் உருவான அந்த படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. ஆனபோதும், விக்ரம் நடிப்பில் இயக்கிய ராஜபாட்டை படத்தினால் தன் மீது கோடம்பாக்கத்துக்கு ஏற்பட்ட அதிருப்தியை அந்த படத்தின் மூலம் மாற்றி மீண்டும் நம்பிக்கைக்குரியவரானார் சுசீந்திரன்.
ஆனால், அந்த படத்தில் நடித்த நாயகன் சந்தோஷ்க்கு அதையடுத்து படங்கள் இல்லை. இந்த நிலையில், தற்போது சந்தோஷின் அண்ணன் நாகா, பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு படத்தில் நாயகனாகியிருக்கிறார். அதிலும் தனது தம்பி சந்தோஷை விட இந்த படத்துக்காக கடுமையாக உழைத்திருக்கிறாராம் நாகா.
அதாவது, பிசாசு படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து அவர் தனது வீட்டுப்பக்கமே அதிகமாக செல்லவில்லையாம். டைரக்டர் மிஷ்கினின் அலுவலகத்திலேயே தங்கியிருந்து ஒவ்வொரு காட்சியையும் ரிகர்சல் பார்த்து வந்தாராம். அதேபோல், படப்பிடிப்பு தளத்திலும் ஒவ்வொரு ஷாட்டையும் டைரக்டருக்கு திருப்தி ஏற்படும்வரை நடித்துக் கொடுத்திருக்கிறாராம்.
அதனால், படம் இன்னும் திரைக்கு வருவதற்கு முன்பே, நாகாவின் உழைப்பு கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.முக்கியமாக, அப்படத்தின் டைரக்டரான மிஷ்கின், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு நல்ல ஹீரோ நாகா என்று தனது நட்பு வட்டார டைரக்டர்களிடம் நாகாவின் திறமை குறித்து சொல்லி வருகிறார். இதனால் முன்னணி ஹீரோக்களின் கால்சீட்டுக்காக வருடக்கணக்கில் காத்திருக்கும் சில இயக்குனர்கள் பிசாசு படத்தில் நாகாவின் நடிப்பை பார்த்து விட்டு அவரை புக் பண்ணுவதற்காக காத்திருக்கிறார்கள்.
Tags- mishkin. nagha. bala. pisaasu. santhosh. suseendran.