Advertisement

சிறப்புச்செய்திகள்

சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

தங்கையின் திருமணத்தில் ஆட தயாராகும் சல்மான் பிரதர்ஸ்!

18 நவ, 2014 - 12:21 IST
எழுத்தின் அளவு:

தனது தங்கை அர்பிதாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கிறார் சல்மான் கான். கூடவே அவரது குடும்பத்தாரும் திருமண வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கின்றனர். நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதா கானுக்கும், ஐதராபாத்தை சேர்ந்த தொழிதிபர் ஆயுஸ் சர்மாவுக்கும் இன்று ஐதராபாத்தில் திருமணம் நடக்கிறது. முன்னதாக மும்பையில், மெகந்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சி நடந்தது. இதில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக எதிரும், புதிருமாக இருந்த ஷாரூக்கான், சல்மானின் திருமண சடங்கில் பங்கேற்றார். இதுதொடர்பான படங்களும் வெளியாகின.


இந்நிலையில் திருமண சடங்கில், சல்மான் மற்றும் அவரது சகோதர்கள் அர்பாஸ் கான் மற்றும் சோகைல் கான் ஆகியோர் நடனம் ஆட இருப்பதாக கூறப்படுகிறது. சல்மான் கான் ஜீனி கே ஹையின் சார் சின் பாடலுக்கும், அர்பாஸ் கான் ஹட் ஹட் டபாங் பாடலுக்கும், சோகைல் கான் ஜெய் ஹோ பாடலுக்கும் ஆட இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சல்மானின் நெருங்கிய நண்பரும், அவர்களது குடும்ப நண்பரும், இயக்குநருமான சாஜித்தும் ஆட இருக்கிறாராம்.


அர்பிதா கானின் திருமணம் ஐதரபாத்தில் நடப்பதால் நவ.13ம் தேதி 22ம் தேதி வரை அங்கு விலையுர்ந்த ஹோட்டல் ஒன்றை சல்மான் கான் புக் செய்துள்ளார். திருமணத்திற்காக மும்பையில் இருந்து பிரத்யேக சமையல் கலைஞர்கள், மணமேடை அலங்கார வடிவமைப்பாளர்கள் ஆகியோர் ஐதராபாத் வந்துள்ளனர்.மேலும் இசை கலைஞர்கள் சுமார் 50 பேரும் ஐதராபாத் வந்துள்ளனர். இதுதவிர பாதுகாப்பிற்கு மட்டும் சுமார் 600 பவுன்சர்களை நியமித்துள்ளார் சல்மான்கான். திருமணத்திற்காக நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.1 கோடி செலவு செய்கிறாராம் சல்மான் கான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in